மூத்த மகனுக்கு தள்ளி போன திருமணம், விரக்தியில் இருந்த பெற்றோர் தற்கொலை..!! சோகத்தில் மூழ்கிய குடும்பம்..!! - Seithipunal
Seithipunal


மகனுக்கு திருமணமாகாத விரக்தியில் தாய் தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், கீழ்குப்பம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன்(50). இவருக்கு திருணமாகி சாந்தாமணி என்ற மனைவியும் , ராகவேந்திரன் (27),  சுரேந்திரன் (25) என்ற மகங்களும் உள்ளனர்.

மூத்த மகனுக்கு திருமணம் செய்து வைக்க வரன் தேடி வந்தனர்.  இந்நிலையில் அவர்களின் இளைய மகன் தான் வேலை செய்த இடத்தில் திருமணம் செய்து கொண்டார்.

இதனாலும், அவரின் திருமணம் தள்ளி சென்றது. அவருக்கு பெண் தர யாரும் தயாராக இல்லாததால் இருவரும் மன வேதனை அடைந்தனர். இந்நிலையில், மன உளைச்சலில் இருந்த இருவரும் வீட்டை விட்டு வெளியே சென்று வருவதாக நேற்றிரவு கூறியுள்ளனர்.

அதிகாலை வரை அவர்கள் திரும்பி வராததால் அக்கம்பக்கத்தில் தேடியுள்ளனர். இதற்கிடையில், கீழ்குப்பம் பகுதியில் உள்ள சுடுகாடு வழியாக சிலர்  அங்கு இவர்கள் இருவரும் பிணமாக கிடந்துள்ளனர்.

உடனே இது குறித்து காவல்துறையினர்  தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவர்களின் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்  அப்போது மகனுக்கு திருமணமாகததால் விரக்தியில் இருந்த அவர்கள் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதி முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Couple commits suicide in frustration of marriage to son


கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?Advertisement

கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?
Seithipunal