சென்னை அரும்பாக்கத்தில் ஆன்லைன் மோசடி: போலி வங்கி கணக்கு தொடங்கி சைபர் குற்றவாளிகளுக்கு உதவிய தம்பதி: சிவகாசியில் அதிரடி கைது..! - Seithipunal
Seithipunal


சென்னை அரும்பாக்கத்தில் ஆன்லைன் மோசடியில் போலி வங்கி கணக்கு தொடங்கி சைபர் குற்றவாளிகளுக்கு உதவிய தம்பதி கைது செய்யப்பட்ட்டுள்ளனர். வாதி திரு.சல்மான் சலீம், ஆ/வ29, த/பெ.அப்தாஸ் சலீம் என்பவர் நடத்திவரும் Travel Management அலுவலகத்தில் Vendor நிறுவனத்தில் இருந்து வந்திருந்த EMail-இல் கொடுக்கப்பட்டிருந்த Punjab National Bank வங்கி கணக்கில் 17.07.2025 அன்று பணம் ரூ.17,72,868/- பணம் செலுத்திவிட்டதாகவும், பின்னர் Vendor நிறுவனத்தில் பணம் அனுப்பி உள்ளது குறித்து கேட்ட போது. அவர்கள் அந்த மின்னஞ்சல் முகவரி அவர்களுடையது இல்லை என்றும் மேற்படி வங்கி கணக்கும் அவர்களுடையது இல்லை என தெரிவித்துள்ளனர்.

தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து இது சம்மந்தமாக ஆன்லைனில் புகார் பதிவு செய்தும், பின்னர் மேற்கு மண்டலம் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி கொடுத்துள்ளனர். 

28.07.2025 அன்று வழக்கு பதிவு செய்யப்பட்டு போலீசார் புலன் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதில் குறித்த புகாரில் உடனடி நடவடிக்கை எடுத்திட சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண் உத்தரவிட்டுள்ளார். அத்துடன், மேற்கு மண்டல இணை ஆணையாளர் திஷா மிட்டல், அறிவுரையின் பேரில், சென்னை பெருநகர காவல், மேற்கு மண்டல சைபர் கிரைம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினரின் விசாரணை நடத்தினர்.

அதில், புகார்தாரர் 17.07.2025 ந்தேதி பணம் அனுப்பிய வங்கி கணக்கானது சிவகாசியில் உள்ள Punjab National bank வங்கி கணக்கு என்பதும், மேற்படி பணத்தினை வங்கி கணக்கிலிருந்து உரிமையாளர் காசோலைகள் மூலமாக எடுத்துவிட்டதாக தெரியவந்துள்ளது. 

குறித்த வங்கி கணக்கின் உரிமையாளர் எதிரி 1. புஷ்பா, பெ/35, க/பெ.சதுரகிரி மற்றும் அவரது கணவர் 2.சதுரகிரி, ஆ/வ 41, த/பெ கிருஷ்ணன் ஆகியோரை காவல் குழுவினர் விருதுநகர் மாவட்டம் சிவகாசி, லட்சுமிபுரம் பகுதியில் உள்ள எதிரிகளின் வீட்டின் அருகில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து பணம் ரூ.2,30,000/-, 02 செல்போன்கள், வங்கி பாஸ்புக் மற்றும் செக்புக் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்த விசாரணையில் புஷ்பாவை facebook மூலமாக தொடர்பு கொண்ட அமெரிக்காவில் வசிக்கும் Chris Otto என்ற நபர் பல கோடி மதிப்பிலான பரிசு பொருட்களை அனுப்புவதாகவும், அதற்கான பார்சல் கட்டணத்தை Delta Courier Service company mail Id-இல் தெரிவிப்பார்கள் என கூறியுள்ளார். இதனை நம்பிய இருவரும் 03 வங்கி கணக்குகளை சைபர் கிரிமினல்கள் கேட்டவாறு தொடங்கி, அவற்றை சைபர் கிரிமினல்கள் கொடுத்த புது டெல்லி முகவரிக்கு போஸ்ட் செய்துள்ளனர். 

அதன் பின்னர் புகார்தாரர் வங்கி கணக்கில் இருந்த வந்த பணம் ரூ.17,72,868/-ஐ Self Withdrawal Cheque வழியாக எடுத்து அவற்றை சைபர் கிரிமினல்கள் கொடுத்த பல வங்கி கணக்குகளில் deposit செய்ததாகவும் மீதமிருந்த பணம் ரூ.3,67,500./- அவர்களுடைய செலவிற்கு வைத்து கொண்டது தெரியவந்தது.

இந்த விசாரணைக்குப்பின்னர் மோசடி செய்த இருவரும் இன்று (01.08.2025) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Couple arrested in Sivakasi for helping cyber criminals by opening fake bank accounts for online fraud in Arumbakkam Chennai


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->