இன்று தொடங்குகிறது பொறியியல் படிப்பு மாணவர்களுக்கான சிறப்பு பிரிவு கலந்தாய்வு.!
counsling start in engineering course
தமிழகத்தில் நடப்புக் கல்வியாண்டுக்கான பொறியியல் படிப்புக்கு 3 லட்சத்து 2 ஆயிரம் மாணவர்கள் பதிவு செய்திருந்தனர். அதில், 2 லட்சத்து 41 ஆயிரம் பேருக்கு தரவரிசை எண் வழங்கப்பட்டது.
இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைகான ஆன்லைன் கலந்தாய்வு இன்று முதல் தொடங்கியது. அதாவது, முதற்கட்டமாக 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் சிறப்பு பிரிவினருக்கு இன்று கலந்தாய்வு தொடங்கியது.

இடஒதுக்கீட்டின் கீழ் மொத்தம் 47 ஆயிரத்து 372 மாணவர்கள் பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்க உள்ளனர். இதைத் தொடர்ந்து நாளைய தினம் மாற்றுத்திறனாளி மாணவர்கள், முன்னாள் ராணுவ வீரர் பிரிவு, விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கு கலந்தாய்வு நாளை வரை நடைபெறுகிறது.
பொதுப்பிரிவில் உள்ள சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 9-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை நடைபெறவுள்ளது. இதில், விளையாட்டு பிரிவின் கீழ் 2 ஆயிரத்து 446 மாணவர்களும், ராணுவத்தினர் பிரிவின் கீழ் 473 பேரும் கலந்தாய்வில் பங்கேற்கவுள்ளனர்.
English Summary
counsling start in engineering course