20 குழந்தைகள் பலிக்கு காரணமான காஞ்சிபுரம் நிறுவனத்தை நிரந்தமாக மூட நடவடிக்கை - அமைச்சர் தகவல்!
cough syrup kanjipuram factory Owner arrested
மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் கோல்ட்ரிப் இருமல் மருந்து அருந்திய குழந்தைகள் உடல்நலக் கோளாறுகளால் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் பின்னணியில், தமிழகம் உள்பட பல மாநிலங்களில் கோல்ட்ரிப் இருமல் மருந்து விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மத்திய பிரதேசத்தில் மட்டும் இதுவரை 20 குழந்தைகள் உயிரிழந்ததாகவும், மேலும் 5 குழந்தைகள் தீவிர நிலையில் சிகிச்சையில் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த மருந்து தமிழ்நாட்டின் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ‘ஸ்ரீசன் பார்மா’ நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் சுமார் 2,000க்கும் மேற்பட்ட கோல்ட்ரிப் பாட்டில்கள் சில்லறை மற்றும் மொத்த விற்பனை நிலையங்களில் இருக்கலாம் என மதிப்பிடப்படுகிறது.
எனவே, மக்கள் அதை பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு மாவட்ட நிர்வாகங்களுக்கு உத்தரவிடப்பட்டு, அந்த மருந்துகளை பறிமுதல் செய்து சென்னையில் உள்ள மருந்து கட்டுப்பாட்டு அலுவலகத்திற்கு அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், கோல்ட்ரிப் சிரப்பை தயாரித்த ‘ஸ்ரீசன் பார்மா’ நிறுவனத்தின் உரிமையாளர் ரங்கநாதனை, மத்திய பிரதேச மாநிலத்தின் சிந்த்வாரா போலீசார் சென்னை போலீசார் உதவியுடன் காஞ்சிபுரம் அருகே உள்ள சுங்குவார்சத்திரத்தில் கைது செய்துள்ளனர். அவர் மீது விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா சுப்பிரமணியன், ‘ஸ்ரீசன் பார்மா’ நிறுவனத்தை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
English Summary
cough syrup kanjipuram factory Owner arrested