தொடர்ச்சியான விலை அதிகரிப்பு ...! - வணிக சிலிண்டர் விலை ரூ.29.50 உயர்வு...!
Continuous price hike Commercial cylinder price hiked by 29point50
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு, சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயிக்கலாம் என மத்திய அரசு முன்பே அனுமதி வழங்கியுள்ளது.

அதன் படி, ஒவ்வொரு மாதமும் நிறுவனங்கள் புதிய விலையை அறிவித்து வருகின்றன.இந்த நிலையில், மார்ச் மாதத்திற்கான வணிகப் பயன்பாட்டு சிலிண்டர் விலையில் மீண்டும் உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் 19 கிலோ எடையுள்ள வணிக சிலிண்டர் ரூ.29.50 அதிகரித்து தற்போது ரூ.1,929-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த மாதமும் ரூ.50 உயர்த்தப்பட்டிருந்த நிலையில், தொடர்ச்சியாக இம்மாதமும் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆனால், வீட்டு பயன்பாட்டிற்கான 14 கிலோ சமையல் சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படாமல், வழக்கம்போல் ரூ.868.50 என்ற பழைய விலையிலேயே விற்பனை நடைபெற்று வருகிறது.
English Summary
Continuous price hike Commercial cylinder price hiked by 29point50