முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் மீது பொது மக்கள் ஊழல் புகார்..!! திமுகவினரின் தூண்டுதலா..?!
Complaint against Sevur Ramachandran in anti bribery dept
திருவண்ணாமலை மாவட்டத்தை அடுத்த ஆரணியில் விலைவாசி உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தின் போது பேசிய அதிமுக நிர்வாகி பாரிபாபு திமுக அமைச்சர் ஏ.வ வேலுவை ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த திமுக நிர்வாகிகள் ஆரணி மார்க்கெட் பகுதியில் உள்ள பாரிபாபுவின் இனிப்பு கடையை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திமுகவினர் கொலை மிரட்டல் விடுத்ததாக அதிமுக நிர்வாகி பாரிபாபு புகார் அளித்தார். அந்த புகாரை காவல்துறையினர் ஏற்க மறுத்து விட்டனர். பின்னர் முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் கொடுத்த அழுத்தத்தின் பேயரில் புகார் மனு இயக்கப்பட்டது. மேலும் திமுகவினர் தரப்பில் டீ குடிக்க சென்ற தங்களை பாரிபாபு தர குறைவாக பேசியதாக காவல்நிலத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது. இச்சம்பவம் ஆரணி பகுதியில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

இந்த நிலையில் இந்து சமய அறநிலை துறை அமைச்சராக இருந்தபோது உண்டியல் பணத்தில் கமிஷன், விபூதி, பஞ்சாமிர்த கொள்முதல் டென்டரில் கமிஷன் பெற்று 200 கோடி ரூபாய் வரை ஊழல் செய்துள்ளதாகவும், ஆரணி சேத்துப்பட்டு சாலையில் கல்லூரி, கர்நாடக மாநிலத்தில் 90 ஏக்கரில் காபி எஸ்டேட் போன்ற சொத்துக்கள் வாங்கியுள்ளதாக சேவூர் பகுதி மக்கள் சார்பில் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் ஆரணி பகுதியில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. அதிமுக மற்றும் திமுகவினர் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பான புகார் மனுவை ஏற்க மறுத்த காவல்துறையினருக்கு முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் அழுத்தம் கொடுத்ததன் காரணத்தால் திமுகவினரின் தூண்டுதலின் பெயரில் இந்த புகார் மனு அளிக்கப்பட்டுள்ளதாக என அதிமுக தரப்பு குற்றம் சாட்டி உள்ளது.
English Summary
Complaint against Sevur Ramachandran in anti bribery dept