#தமிழகம் | சாதிமறுப்பு திருமணம் - வீடு புகுந்து ரகளையில் ஈடுபடும் தமிழக போலீஸ் டிஎஸ்பி.! பச்சிளம் குழந்தையுடன் இளம்பெண் புகார்.! - Seithipunal
Seithipunal


திருநெல்வேலி : சங்கரன் திருடு பகுதியைச் சேர்ந்த முப்புடாதி என்பவரின் வீட்டை, எஸ்பி ராமகிருஷ்ணன் இன்ஸ்பெக்டர் ஜின்குமார் தலைமையிலான போலீசார் சூறையாடி உள்ளதாக புகார் எழுந்துள்ளது.

மேலும், இந்த விவகாரத்தில் சேரன்மகாதேவி காவல்துறை டிஎஸ்பி மீது, டிஜிபி அலுவலகத்தில் புகார் முப்புடாதி மனைவி கொடுத்துள்ளார்.

அவரின் அந்த புகார் மனுவில், "நான் எனது கணவர் மற்றும் குழந்தையுடன் குடியிருந்து வருகிறேன். எனது கணவர் விவாசாய கூலி வேலை செய்து வருகிறார். எனக்கும் எனது கணவருக்கும் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. தற்போது ஒரு ஆண் குந்தை உள்ளது.

நானும் எனது கணவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். இருவரும் ஒருவரையொருவர் விரும்பி கலப்பு திருமணம் செய்துகொண்டுள்ளோம்.

எங்களது திருமணத்திற்கு முன்பு எனது கணவர் மீது குற்றவழக்குகள் பதியப்பட்டு, தற்போது நிலுவையில் இருந்து வருகிறது. ஆனால், திருமணம் முடிந்தபிறகு எனது கணவர் மீது எந்தவித குற்ற வழக்குகளும் பதிவு செய்யப்படவில்லை. என் கணவர் எந்தவித குற்ற செயல்களிலும் ஈடுபடுவதில்லை. எனது கணவரின் விவாசாய கூலி வருமானத்தை கொண்டு அமைதியான முறையில் குடும்பம் நடத்தி வருகிறோம்.

இந்நியிைல், தமிழக காவல்துறையினர் எடுத்து வரும் ரடிகன் கைது நடவடிக்கையில் எனது கணவர் பெயரையும் சேர்த்து, கைது செய்து சிறையில் அடைக்க காவல்துறையினர் முயற்ச்சித்து வருகின்றனர். எனது கணவர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டால், நானும் எனது கைகுழந்தையும் சாப்பாட்டிற்கு கூட வசதியில்லாத நிலை ஏற்படும். 

மேலும் எனது கணவர் எந்தவித குற்ற செயல்களிலும் ஈடுபடுதாநிலையிலும் என் கணவர் மீது காவல்துறையினர் தொடர்ச்சியாக பல்வேறு காவல்நிலையங்களில் குற்றவழக்கு பதிவு செய்து வருகின்றனர். 

இதற்கு ஆதாரம் திரட்டும் நோக்கோடு எனது கணவர், தன் நண்பர் எடுத்து வரும் குறும்படத்தில் நடித்த சில காட்சிகளை மட்டும் நிஜந்தில் அவர் செய்தது போன்று தாழையூத்து காவல் நிலையத்தில் பொய்யாக வழக்கு பதிவு செய்துள்ளனர். 

மேலும், அவரது நண்பரை அவரே கடத்தியதாக நண்பரையும், நண்பரின் குடும்பத்தாரையும் மீரட்டி புகார் செய்ய கட்டாயபடுத்தி வழக்கு பதிவு செய்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் எங்களது ஊரின் அருகில் உள்ள தேவேந்திலகுலவேளாளர் சமூக மக்களிடம் சென்று, எனது கணவர் அவர்கள் சமூகத்தில் ஒருவரை கொலை செய்யதிட்டம் தீட்டுவதாகவும், அதற்கு முன் எனது கணவரை நீங்கள் கொலை செய்துவிடுங்கள் என்றும், இல்லையேல் அவனை பிடித்து எங்களிடம் ஒப்படைத்துவிடுங்கள் என சாதிய வன்மத்தோடும் சாதி கலவரத்தை தூண்டும் விதமாகவும் காவல்துறை துணைகண்காணிப்பாளர் ராமகிருஷ்ணன் தொடர்ந்து தூண்டி வருகிறார். 

மேலும், எனது கணவர் வேலை செய்யும் இடங்களில் சென்று அவருக்கு வேலை கொடுப்போரை மிரட்டி, அவர்கள் மீது பொய்வழக்கு போட்டு என் கணவருக்கு இடையூறு செய்து வருகிறார். மேலும், எனது கணவரின் தந்தை எனது கணவரின் தங்கையின் கணவர் மற்றும் எனது கணவரின் உறவினர்கள் ஒவ்வொருவரையும் ஒருவர்பின் ஒருவராக தனித்தனியே விசாரணை என்று காவல்நிலையம் மற்றும் காவல்நிலையம் அல்லாத இடங்களுக்கும் அழைத்து சென்று ஒரு நாள் முழுவதும் வைத்தும், அடித்து துண்புறுத்தியும் வழக்கு எதுவும் பதியாமல் போகசெய்வது எனவும் தொடர்ந்து செய்து வருகிறார். 

இது போன்று தொடர்ந்து எனது கணவருக்கு மனிதஉரிமை மீறல், அத்துமீறும் செயல்களில் ஈடுபட்டுவரும் துணைகண்காணிப்பாளர் ராமகிருஷ்ணன் மற்றும் காவல்துறையினர் மீதும் தாங்கள் விசாரித்து தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். சட்டத்திற்க்கு உட்பட்டு நானும் எனது கணவரும் நன் மதிப்போடு வழிசெய்திடவும் எங்களுக்கு ஒருவாய்ப்பு வழங்கும்படி பணிவுடன் வேண்டுகிறேன்" இவ்வாறு அந்த புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

complaint against nellai seranmahadevi dsp


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->