வரும் 14 ஆம் தேதி மீனாட்சி அம்மன் கோவில் நடை அடைப்பு - இதுதான் காரணமா? - Seithipunal
Seithipunal


தமிழ் கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் திருப்பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், வருகிற 14-ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.

இந்த விழாவில், மதுரை மக்கள் தாய்-தந்தையாக வழிபட்டு வரும் மதுரை மீனாட்சி அம்மன் மற்றும் சொக்கநாதர் தனது மகனான திருப்பரங்குன்றம் முருகப்பெருமானின் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க உள்ளனர்.

இதன் காரணமாக மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வருகிற 14-ந்தேதி முழுவதும் நடை அடைக்கப்படுகிறது. மீனாட்சி அம்மனும், சொக்கநாதரும் திருப்பரங்குன்றம் முருகன் கோவில் கும்பாபிஷேகத்தை பார்ப்பதற்காக வருகிற 13-ந்தேதி மாலையிலேயே கோவிலில் இருந்து கிளம்பி விடுகிறார்கள்.

மறுநாள் 14-ந்தேதி திருப்பரங்குன்றம் முருகன் கோவில் மகா கும்பாபிஷேகத்தில் கலந்துகொண்டு விட்டு, அன்று மாலை நடக்கக்கூடிய பஞ்சமூர்த்தி புறப்பாடு நிகழ்ச்சியிலும் பங்கேற்றுவிட்டு, அன்று இரவுதான் மதுரைக்கே திரும்புகிறார்கள்.

ஆகவே பக்தர்கள் மீண்டும் மீனாட்சி அம்மனையும், சொக்கநாதரையும் 15-ந்தேதி காலையில் தான் தரிசனம் செய்ய முடியும். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு செல்பவர்கள் அதற்கு ஏற்ப தங்களின் பயணத்தை திட்டமிட்டுக் கொள்ளலாம் என்றது தெரிவிக்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

coming 14th meentchi amman temple gate close


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?


செய்திகள்



Seithipunal
--> -->