திருப்பரங்குன்றம் தாலுகாவிற்கு மட்டும் உள்ளூர் விடுமுறை - எப்போது தெரியுமா?
coming 14th local holiday to thiruparangundram taluk
தமிழகத்தில் பொது விடுமுறை அல்லாமல், முக்கிய தலைவர்களின் பிறந்தநாள், நினைவுநாள், கோவில் திருவிழா உள்ளிட்டவற்றின் போது அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அளித்துக் கொள்ளலாம் என்று தமிழக அரசு தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில், மதுரை மாவட்டத்திற்கு வருகின்ற 14 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இது குறித்து மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார் தெரிவித்து இருப்பதாவது:-
"நாளை மறுநாள் மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவிலில் மகா கும்பாபிஷேக விழா நடைபெறவுள்ளது. அன்றைய தினம் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகாவுக்கு உட்பட்ட பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு மட்டும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது.
இருப்பினும் 14-ந் தேதி அன்று பள்ளி, கல்லூரிகளில் தேர்வுகள் ஏதேனும் அறிவிக்கப்பட்டிருப்பின் சம்பந்தப்பட்ட மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் தொடர்புடைய பணியாளர்களுக்கும் இந்த விடுப்பு பொருந்தாது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக வருகிற 19-ந்தேதி மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தாலுகாவுக்கு உட்பட்ட பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு மட்டும் வேலை தினமாக அறிவிக்கப்படுகிறது.
14-ந் தேதி அன்று மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தாலுகாவுக்கு உட்பட்ட சார்நிலை கருவூலம் அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும்" என்றுத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
coming 14th local holiday to thiruparangundram taluk