விநாயகர் சிலை முன், கல்லூரி மாணவிக்கு தாலி கட்டிய இளைஞர்..!
விநாயகர் சிலை முன், கல்லூரி மாணவிக்கு தாலி கட்டிய இளைஞர்..!
விநாயகர் சதுர்த்தியையொட்டி தமிழகத்தில் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபட்டனர். திருப்பூர் அடுத்த கருவம்பாளையம் சந்திப்பில் விநாயகர் சிலை வைக்கப்பட்டு உள்ளது.
அங்கு வந்த கல்லூரி மாணவி மற்றும் வாலிபரும் விநாயகரை தரிசனம் செய்தனர். அப்போது திடீரென அந்த வாலிபர் தான் கொண்டு வந்த தாலியை மாணவி கழுத்தில் கட்டினார்.
இதனால் அங்கு பொதுமக்கள் அங்கு குவிந்தனர். இது குறித்து திருப்பூர் வடக்கு காவல் நிலையத்துக்கு தகவல் அளிக்கப்பட்டது. விரைந்து வந்த காவல் துறையினர், மாணவி மற்றும் வாலிபரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
பிறகு, பெற்றோரும் அழைத்து வரப்பட்டனர். விசாரணையில் அந்த வாலிபர் பெயர் ராஜூ (வயது 24) மாணவி பெயர் ஜோதி (வயது 18) என்பதும் தெரியவந்துள்ளது. மாணவி தனியார் கல்லூரியில் படித்து வருகிறார்.
இவர்கள் காதலை, பெற்றோர் ஏற்காததால் விநாயகர் சிலை முன் திருமணம் செய்து கொண்டதாக கூறியுள்ளனர். அவர்கள் இருவரும் மேஜர் என்பதால் அவர்களுக்கு காவலர்கள் அறிவுரை கூறியுள்ளனர்.
English Summary
college student marriage in vinayagar sathurthi