சோகத்தில் முடிந்த கல்லூரி கனவு! தேர்வு பயத்தால் மாணவி எடுத்த விபரீத முடிவு...! - நடந்தது என்ன?
College dream ended tragedy Student made bizarre decision due exam fear What happened
மதுரை துவரிமான் மேலத்தெருவைச் சேர்ந்த கார்த்திகேயன் சுமைதூக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்தார். அவரது மனைவி வனிதா. இந்த தம்பதியருக்கு பிரியதர்ஷினி, பிரசன்னா தேவி என்ற இரு மகள்களும், சக்திவேல் என்ற மகனும் உள்ளனர்.
இதில் மூத்த மகள் பிரியதர்ஷினி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த நிலையில், குடும்பம் முழுவதும் சமயநல்லூர் அருகே உள்ள ஊர்மெச்சிகுளத்தில் வாடகை இல்லத்தில் வசித்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

பிரசன்னா தேவி தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி முதலாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 5-ந்தேதி நடைபெற்ற கல்லூரி தேர்வை எழுதி முடித்த பிறகு, தனது தோழியுடன் செல்பேசியில் உரையாடிய அவர், தேர்வை எதிர்பார்த்தபடி எழுத முடியவில்லை என மனக்கசப்புடன் தெரிவித்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் பின்னர் அவர் ஆழ்ந்த மனஅழுத்தத்தில் இருந்து வந்ததாகவும் நெருங்கியவர்கள் தெரிவித்துள்ளனர்.இந்த நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பிரசன்னா தேவி தனியறைக்குள் சென்று சேலையால் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டார்.
சிறிது நேரம் கழித்து வீடு திரும்பிய தாயார் வனிதா, மகள் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதை கண்டு கதறி அழுதார். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் உடனடியாக அவரை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
ஆனால் மருத்துவர்கள் பரிசோதித்தபோது, பிரசன்னா தேவி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குடும்பத்தினரையும் அப்பகுதி மக்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்த சமயநல்லூர் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து, மாணவியின் உயிரிழப்புக்கான பின்னணி குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
College dream ended tragedy Student made bizarre decision due exam fear What happened