கடும் எச்சரிக்கை! மாணவர்களை சுரண்ட முயன்றால் கல்லூரி அங்கீகாரம் ரத்து...! -அரசு மருத்துவ மாணவர் சேர்க்கை குழு - Seithipunal
Seithipunal


2025-26 கல்வியாண்டுக்கான மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வு 2 -ம் சுற்று முடிவடைந்து, முதலாம் ஆண்டு வகுப்புகள் அதிகாரப்பூர்வமாக துவங்கி விட்டன.நேற்று முன்தினம் வகுப்புகள் துவங்கியிருந்தாலும், கலந்தாய்வில் இடம் பெற்ற மாணவ–மாணவிகள் இன்னும் கல்லூரிகளில் சேர்ந்து கொண்டே இருக்கிறார்கள்.

இந்த நிலையில், சில தனியார் மருத்துவக் கல்லூரிகள் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை மீறி, மாணவர்களிடம் கூடுதல் தொகை கோருகிறார்கள் என்ற புகார்கள் மழைபோல் குவிந்துள்ளன. இதைத் தொடர்ந்து, மருத்துவ மாணவர் சேர்க்கை குழு, அனைத்து தனியார் மருத்துவக் கல்லூரி டீன்கள் மற்றும் முதல்வர்களுக்கு கடும் எச்சரிக்கை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,"அனைத்து சுயநிதி மருத்துவக் கல்லூரிகளும், உச்சநீதிமன்றம், உயர் நீதிமன்றம் மற்றும் தேசிய மருத்துவ ஆணையம் விதித்துள்ள வழிகாட்டுதல்களை தவறாமல் பின்பற்ற வேண்டும்.
2025-26 கல்வியாண்டிற்கான எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கு, கட்டண நிர்ணயக் குழுவால் அறிவிக்கப்பட்ட கட்டணத்தை மீறி வசூலித்தால், அந்த நிறுவனங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

மாணவர்கள் அல்லது பெற்றோரிடமிருந்து புகார் வந்தால், அங்கீகாரம் ரத்து, இணைப்பு நீக்கம் உள்ளிட்ட கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

College accreditation cancelled if students exploited Government Medical Admissions Committee


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->