இளைஞர் தற்கொலை.. தூங்கி கொண்டிருந்த ஓட்டுநர்களும் உயிரிழந்த பரிதாபம்! நடந்தது என்ன?  - Seithipunal
Seithipunal


தேனி மாவட்டத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர்கள் 7 பேர் கோவை, சூலூர் அருகே பணியாற்றி வந்துள்ளனர். இவர்களில் அழகுராஜா என்பவர் சில நாட்களுக்கு முன்பு லாரி ஓட்டும் போது திடீரென விபத்தை ஏற்படுத்தியதால் கடும் மன உளைச்சலில் இருந்ததாக தெரிகிறது. 

இந்நிலையில் நேற்று இரவு அழகுராஜா உள்பட 7 ஓட்டுநர்கள் ஒரே வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென அழகுராஜா வீட்டில் இருந்த பெட்ரோல் கேனை எடுத்து தன் மீது ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்துள்ளார். 

இதனால் வீட்டில் இருந்த மற்ற பொருட்கள் மீதும், தீப்பிடித்து எரிய தொடங்கியதில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தவர்கள் மீதும் தீப்பற்றி எரிய தொடங்கியது. இந்நிலையில் அழகுராஜா உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். 

மேலும் 4 பேர் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் தீவிரசிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் மூன்று பேரின் உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படை வீரர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை முழுமையாக அனைத்து உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Coimbatore Youth suicide sleeping drivers died


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->