மலர் கண்காட்சியை முன்னிட்டு கோவை டூ ஊட்டி 25 சிறப்பு பேருந்துகள் இயக்கம்.!! - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகரித்து வெப்பநிலை வீசுகிறது. தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் 110 டிகிரியை நெருங்குகிறது. கோடை வெயிலின் தாக்கத்தால் மக்கள் அனைவரும் குளிர் பிரதேசங்களுக்கும் படையெடுத்துள்ளனர். ஊட்டியில் மலர் கண்காட்சி தொடங்க உள்ளதால் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக நீலகிரி வருபவர்களுக்கு இ-பாஸ் பெற்று செல்ல உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஊட்டியில் மலர்கண்காட்சி  வருகின்ற மே 10ஆம் தேதி தொடங்கி மே 20 ஆம் தேதி வரை நடக்க உள்ளது. ஊட்டி மலர்கள் காட்சியை கண்டு களிக்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருவார்கள்.  இதனை கருத்தில் கொண்டு கோவையில் இருந்து ஊட்டிக்கு நாளை முதல் 25 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது என்று போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Coimbatore to Ooty 25 special bus


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->