இன்ஸ்டா ‘காதல்’ வலையில் விழுந்த கோவை மாணவர்...! வீடியோ காலில் நிர்வாணக் கோலம்...! - உறவினர்களுக்குப் பகிரப்பட்ட வீடியோவைத்து மிரட்டல்...! - Seithipunal
Seithipunal


கோவையைச் சேர்ந்த 19 வயதுடைய கல்லூரி மாணவர் ஒருவர், இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் மூலம் இளம் பெண் ஒருவர் அவருக்கு அறிமுகமாகி, நாளுக்கு நாள் உரையாடல் நெருக்கமாக மாறியது. ஆரம்பத்தில் சாதாரண நட்பாக இருந்த இந்த தொடர்பு, பின்னர் அபாயகரமான திருப்பத்தை எடுத்தது.

அந்த இளம் பெண்ணின் வலையில் சிக்கிய மாணவர், நம்பிக்கையுடன் வீடியோ அழைப்பில் அவளுடன் பேசிக் கொண்டிருந்தபோது, அறியாமலேயே தவறான நிலைக்கு தள்ளப்பட்டார். அந்த தருணத்தை, மறுபுறம் இருந்தவர்கள் ரகசியமாக பதிவு செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.

சில நிமிடங்களிலேயே, அந்த பதிவு செய்யப்பட்ட காட்சிகள் மாணவரின் இன்ஸ்டாகிராம் கணக்கிற்கு அனுப்பப்பட்டதும், அவர் அதிர்ச்சியில் உறைந்தார். உடனே அந்த பெண்ணை தொடர்பு கொள்ள முயன்றபோது, மறுமுனையில் ஒருவர் பேசிக் கொண்டு, அந்த வீடியோவை அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் அனுப்பாமல் இருக்க ரூ.20 ஆயிரம் பணம் கோரி மிரட்டியதாக தெரிவிக்கப்படுகிறது.

பயத்தில் திகைத்த மாணவர், தன்னிடம் இருந்த பணத்தை உடனடியாக அனுப்பியுள்ளார். ஆனால் அதுவே முடிவாகாமல், மீண்டும் மீண்டும் பணம் கேட்டு மிரட்டல் தொடர்ந்தது. பணம் வழங்க முடியாது என தெரிவித்தபோதும், மிரட்டலை அவர்கள் அதிகரித்தனர்.

இறுதியில், அந்த கும்பல் மாணவரின் தனிப்பட்ட காட்சிகளை அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களின் சமூக வலைத்தள கணக்குகளுக்கு பகிர்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் மனஉளைச்சலில் ஆழ்ந்த மாணவர், நடந்த சம்பவம் குறித்து தனது அருகினர்களிடமிருந்து அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.

இதையடுத்து, அவர் கோவை மாநகர சைபர் குற்றப்பிரிவு காவலர்களிடம் புகார் அளித்தார். அதன் பேரில் காவலர்கள் வழக்குப் பதிவு செய்து, இந்த மோசடி மற்றும் மிரட்டல் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யார் என்பதை கண்டறிய தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என தெரிவிக்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Coimbatore student falls trap Instagram love Video shows naked body Threats over video shared relatives


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?




Seithipunal
--> -->