சட்டத்தின் ஓட்டையில் புகுந்து தப்பிக்க நினைத்த வழக்கறிஞர் தம்பதி.. கம்பி வைத்த சிறையில் நுழைந்த சோகம்.! - Seithipunal
Seithipunal


கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சுந்தரராஜபுரம் பகுதியைச் சேர்ந்த தம்பதி ராஜவேல் - மோகனா. இவர்கள் இருவரும் வழக்கறிஞர் ஆவார்கள். கடந்த 2013 ஆம் வருடத்தில் ராஜவேல் கோவை மாநகராட்சியில் தனது மனைவி இறந்து விட்டதாக சான்றிதழ் வாங்கிய நிலையில், அதனை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார். 

அவரது மனைவிக்கு வழங்கப்பட்ட இறப்பு சான்றிதழில் ராஜவேல் ஒப்புதல் கையெழுத்திட்ட நிலையில், அவர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதன்பின்னர் ராஜவேல் மீது போத்தனூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். 

இதன் பின்னர் தன் மனைவி உயிரோடு இருப்பதாக காவல்துறையினர் முன்னிலையில் ஆஜர்படுத்தவே, மோகனா மாரடைப்பின் காரணமாக உயிரிழந்ததாக சான்றிதழ் வழங்கிய செல்வபுரம் பகுதியை சேர்ந்த மருத்துவர் மோகன் ராஜ் என்பவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

விசாரணையில், சம்பவத்தன்று சடலத்துடன் ராஜவேல் வந்ததால் பிரேதத்தை பரிசோதித்து சான்றிதழ் வழங்கியதாகத் தெரிவித்துள்ளார். சடலத்துடன் வந்து சான்றிதழ் பெற்றால், இறந்தது யார்? என்ற விசாரணை மீண்டும் ராஜவேலின் மீது திரும்பியுள்ளது. 

இதனைத்தொடர்ந்து நடைபெற்ற கிடுக்குபிடி விசாரணையில், கடந்த 2011 ஆம் வருடம் உத்திர பிரதேசம் போன்ற வடமாநிலங்களில் சிட்பண்ட் மோசடியில் ஈடுபட்ட மனைவியை காப்பாற்ற யோசனை செய்துள்ளார். இந்த நிலையில், கோவை சிவானந்தா காலனி பகுதியை சேர்ந்த அமாவாசை என்ற பெண், கணவனுக்கு தெரியாமல் தனது பெயரில் உள்ள சொத்துக்களை தன் பெயருக்கு மாற்றி எழுதி வைப்பது தொடர்பாக ராஜவேலை சந்தித்துள்ளார். 

இதனையடுத்து பெண்மணி அமாவாசையை கொலை செய்து, தனது மனைவி இறந்து விட்டதாக ஆள்மாறாட்ட நாடகத்தை அரங்கேற்றி மாரடைப்பு காரணமாக மரணம் ஏற்பட்டார் போல சான்றிதழ் வாங்கியது தெரியவந்துள்ளது. இந்நிலையில், தனது மனைவியின் பெயரில் புதிதாக சொத்து வாங்க வேண்டும் என்பதால், அவர் உயிரோடு இருப்பதாக சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்து காவல் துறையினரிடம் சிக்கியுள்ளது தெரியவந்துள்ளது. 

மேலும், இது தொடர்பாக ராஜவேல், மோகனா, ஓட்டுனர் பழனிச்சாமி, உதவியாளர் பொன்ராஜ் ஆகிய 4 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த வழக்கு விசாரணைக்கு பின்னர் தம்பதிகளுக்கு ஆயுள் தண்டனை விதித்து, தலா ரூ.1.20 இலட்சம் அபராதம் விதித்த நிலையில், உடைந்தையாக இருந்த ஓட்டுநர் மற்றும் உதவியாளருக்கு 7 வருட சிறை தண்டனை விதித்து ரூ.1.20 இலட்சம் அபராதம் செலுத்த கூறி உத்தரவிட்டனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Coimbatore Lawyer Couple Arrest by Police and Judgement 1 December 2020


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?


செய்திகள்



Seithipunal
--> -->