சிறுமியை காதல் வலையில் வீழ்த்தி, நண்பனின் இல்லத்திற்கு கடத்தி சென்ற காமுகன்.. கோவையில் பகீர்.!! - Seithipunal
Seithipunal


கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள போத்தனூர் பகுதியை சார்ந்தவர் மணிகண்டன். இவர் அடிக்கடி கிரிக்கெட் விளையாட அங்குள்ள விளையாட்டு மைதானத்திற்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். இந்த நேரத்தில், அப்பகுதியை சார்ந்த சிறுமியை காமுகன் கவனித்து வந்துள்ளான். 

இதனையடுத்து சிறுமியிடம் பல வித்தைகளை காண்பித்து, பழக்கத்தை ஏற்படுத்தி சிறுமியின் மனதில் இடம் பிடித்துள்ளான். பின்னர் சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி காதல் என்ற பெயரில் பாலியல் தொல்லை வழங்கி வந்துள்ளான்.

இந்த நிலையில், சிறுமியை திருமணம் செய்வதாக கூறி காமுகன் ஆசைவார்த்தை கூறி தனது நண்பனின் இல்லத்திற்கு அழைத்து சென்றுள்ளான். தங்கள் மகளை காணாது பதறிப்போன பெற்றோர் அங்குள்ள காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளனர்.

காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில் சிறுமியை மணிகண்டன் கடத்தி சென்றது தெரியவந்துள்ளது. இதனையடுத்து கோவை மகளிர் காவல் நிலைய அதிகாரிகள் மணிகண்டனை கைது செய்து சிறுமியை மீட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Coimbatore child girl kidnapped by drama lover


கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
Seithipunal