மதுரையில் 'தாய்மாமன் தங்க மோதிரம்' திட்டம் தொடக்கம்: மீனாட்சி அம்மன் கோயிலில் முதல்வர் விஜய் சாமி தரிசனம்! - Seithipunal
Seithipunal


தமிழக முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் நாளை (செப்டம்பர் 28, திங்கட்கிழமை) மதுரைக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, பல்வேறு அரசு நலத்திட்டத் தொடக்க விழாக்கள் மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளார். முதலமைச்சரின் இந்த மதுரை வருகையையொட்டி மாநகர் முழுவதும் காவல்துறையினரின் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்:

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கு அரசு சார்பில் 'தாய்மாமன் தங்க மோதிரம்' வழங்கும் திட்டம் நாளை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைக்கப்படவுள்ளது. 2026-ஆம் ஆண்டு ஜூன் 22-ஆம் தேதி முதல் பிறந்த குழந்தைகளுக்கு இத்திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பகல் 12 மணிக்கு நடைபெறும் தொடக்க விழாவில் முதலமைச்சர் விஜய் பங்கேற்று, முதற்கட்டமாக 30 குழந்தைகளுக்கு தலா 1 கிராம் எடையுள்ள (22 கேரட் தூய்மை) தங்க மோதிரங்களை அணிவித்து இத்திட்டத்தைத் தொடங்கி வைக்கிறார்.

காந்தி அருங்காட்சியகம் திறப்பு:

மருத்துவமனை நிகழ்வைத் தொடர்ந்து, ரூ.10.25 கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்டு பொலிவூட்டப்பட்டுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தை முதலமைச்சர் விஜய் திறந்து வைக்கிறார். பின்னர், அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள மகாத்மா காந்தியின் ரத்தம் தோய்ந்த ஆடைகள் மற்றும் அவர் பயன்படுத்திய அரிய வரலாற்றுப் பொருட்களை நேரில் பார்வையிடுகிறார்.

மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனம்:

அரசு விருந்தினர் மாளிகையில் சிறிது நேரம் ஓய்வெடுக்கும் முதலமைச்சர், மாலை 4.30 மணியளவில் உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்யவுள்ளார். சுமார் 17 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த செப்டம்பர் 17-ஆம் தேதிதான் இக்கோயிலின் மகா கும்பாபிஷேகம் மிக விமரிசையாக நடைபெற்றது. தற்போது கோயிலில் மண்டல பூஜைகள் நடைபெற்று வரும் சூழலில், கும்பாபிஷேகத்திற்குப் பிந்தைய முதலமைச்சரின் இந்த மீனாட்சியம்மன் கோயில் தரிசனம் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

CM Vijay to Launch Thaimaman Thanga Mothiram Scheme in Madurai Scheduled to Visit Meenakshi Amman Temple


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?




Seithipunal
--> -->