CM ஸ்டாலின் மனைவிக்கு எல்.முருகன் வைத்த வேண்டுகோள்!
CM Stalin s wife receives a request from L Murugan
பல லட்சம் மக்கள் இன்று ஒரே நேரத்தில் கந்த சஷ்டி கவசம் பாட உள்ளனர். இந்த புனித்தருணத்தில் தமிழக முதல்-அமைச்சரின் மனைவி துர்கா ஸ்டாலினும் வீட்டில் அமர்ந்து கந்த சஷ்டி கவசம் பாட வேண்டும் என்றுஎன்று மத்திய இணை மந்திரி எல்.முருகன் வேண்டுகோள்விடுத்துள்ளார்.
மதுரையில் இந்து முன்னணி சார்பில் இன்று மாலை பாண்டிக்கோவில் சாலையில் உள்ள அம்மா திடலில் முருக பக்தர்கள் மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டில் அரசியல் தலைவர்கள், ஆன்மிகவாதிகள், மடாதிபதிகள், ஆதீனங்கள் உள்பட பலர் கலந்துகொள்கிறார்கள்.முக்கியமாக மாநாட்டில் சிறப்பு விருந்தினராக உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் ,ஆந்திர துணை முதல்-மந்திரி பவன் கல்யாண் ஆகியோர் கலந்து கொண்டு பேசுகின்றனர்.
இந்தநிலையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்த பின்னர் மத்திய இணை மந்திரி எல்.முருகன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-உலகம் முழுவதும் உள்ள தமிழ் முருக பக்தர்கள் ஆவலுடன் எதிர்பாத்த முருக பக்தர்கள் மாநாடு இன்று மாலை 3 மணிக்கு நடைபெற உள்ளது. பல லட்சம் மக்கள் இன்று ஒரே நேரத்தில் கந்த சஷ்டி கவசம் பாட உள்ளனர். இந்த புனித்தருணத்தில் தமிழக முதல்-அமைச்சரின் மனைவி துர்கா ஸ்டாலினும் வீட்டில் அமர்ந்து கந்த சஷ்டி கவசம் பாட வேண்டுகிறேன்.இது ஒரு கட்சி சார்ந்த மாநாடு அல்ல என்றும் அனைத்து தரப்பினரும் கட்சி பேதமின்றி பங்கேற்கும் ஆன்மீக மாநாடு.
முருக பக்தர்கள் ஒருங்கிணைவது திருமாவளவன் போன்றவர்களுக்கு ஏன் பிடிக்கவில்லை? வேறு மதங்கள் இப்படி ஒன்று சேர்ந்தால் எதிர்ப்பு தெரிவிக்க துணிவார்களா? மதுரை முருகர் மாநாட்டிற்கு காவல் துறையின் ஒத்துழைப்பு இல்லை. சென்னை ஐகோர்ட்டு அறிவுறுத்திய பிறகும் தேவையான ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என்றார்.
English Summary
CM Stalin s wife receives a request from L Murugan