'கலைத்தாய் பெற்றெடுத்த பெருங்கலைஞனே'... கமல்ஹாசனுக்கு முதல்வர் பிறந்தநாள் வாழ்த்து.! - Seithipunal
Seithipunal


உலக நாயகன் கமல்ஹாசன் இன்று 68-வது பிறந்தநாளில் அடியெடுத்து வைத்துள்ளார். தன்னுடைய 6-வது வயதில் நடிக்க வந்த கமல்ஹாசன் 62 ஆண்டுகளாக திரை துறையில் வளம் வரும் இவரது பிறந்தநாளிற்கு திரையுலகினர், ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின அவர்கள் நடிகர் கமல்ஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தள்ளார். இதுதொடர்பாக முதல்-அமைச்சர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்த வாழ்த்துச் செய்தியில்,

"தீராக் கலைத்தாகத்துடன் தன்னை இன்னும் இன்னும் பண்படுத்தி மிளிரும் சீரிளம் கலைஞானியும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான அன்புத்தோழர் கமல்ஹாசன் அவர்களுக்கு என் பிறந்தநாள் வாழ்த்துகள். கலைத்தாய் பெற்றெடுத்த பெருங்கலைஞனே வாழிய நின் கலைத்திறம்" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CM Stalin birthday wishes to actor Kamal Haasan


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->