இஸ்லாமிய ஆயுள் சிறைவாசிகள் விடுதலை.. ஆளுநரின் ஒப்புதலுக்காக விரைவில் அனுப்பப்படும்..!! – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு..!! - Seithipunal
Seithipunal


சென்னை கொட்டிவாக்கத்தில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் பவள ஆண்டு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக அமைச்சர்கள் செஞ்சி மஸ்தான், மா.சுப்பிரமணியன், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாளர் குஞ்ஞாலிக்குட்டி, மாநிலத் துணைத் தலைவர் நவாஸ் கனி, தமிழ்நாடு வாக்கு வாரிய தலைவர் அப்துல் ரகுமான், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அப்பொழுது பேசிய அவர் "திமுகவிற்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையேயான உறவை யாராலும் பிரிக்க முடியாது சமூக நீதி, சகோதரத்துவம், சமதர்மம் என நாட்டை காப்பாற்றுவதற்கான கருத்தியல்கள் ஒரே மொழி ஒரே பண்பாடு என நாட்டை ஒற்றுமை தன்மையுடையதாக மாற்ற நினைப்பவர்கள் சமூக நீதிக்கு எதிரானவர்கள். எதிர்வரும் நாடாளுமன்ற பொது தேர்தலில் வெற்றி பெற அனைவரும் ஒர் அணியில் திரள வேண்டும். சில கோரிக்கை தீர்மானங்கள் வைத்துள்ளீர்கள். இந்த தீர்மானங்களை முன்வைக்கும் உரிமை உங்களுக்கு இருக்கிறது. அதை செய்து தரும் கடமை எனக்கு உள்ளது. அதை மறக்க மாட்டேன், மறுக்கவும் மாட்டேன்.

நீண்ட காலமாக சிறையில் இருக்கும் இஸ்லாமிய சிறைவாசிகளை கருணை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளீர்கள். திமுக ஆட்சிக்கு வந்ததும் ஓய்வு பெற்ற நீதிபதி ஆதிநாதன் தலைமையில் ஆறு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது அந்த குழுவின் பரிந்துரை தற்பொழுது அரசிடம் வழங்கப்பட்டுள்ளது. 

அந்த பரிந்துரை கோப்புகளை நான் படித்துப் பார்த்தேன். நீண்டகாலமாக சிறையில் இருக்கும் இஸ்லாமிய விசாரணை கைகளை விடுவிக்க பரிந்துரைக்கும் அரசின் கோப்பு விரைவில் ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும்" என விட மேடையில் முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Cm mkstalin announced muslim prisoners will release soon


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->