குன்னூர் பேருந்து விபத்து - உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் நிதியுதவி அறிவிப்பு.!
cm mk stalin financial announce to kunnur bus accident died peoples family
குன்னூர் பேருந்து விபத்து - உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் நிதியுதவி அறிவிப்பு.!
தென்காசி மாவட்டத்திலிருந்து சுமார் முப்பதுக்கும் மேற்பட்டோர் ஊட்டிக்கு தனியார் பேருந்து மூலம் சுற்றுலாவிற்கு சென்றுவிட்டு தென்காசிக்கு திரும்பி வந்துக் கொண்டிருந்தனர். இதையடுத்து இந்தப் பேருந்து நீலகிரி மாவட்டம், குன்னூர் பர்லியாறு அருகே வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது.
இந்த விபத்தில் பேருந்து பயணம் செய்த முப்புடாதி, முருகேசன், இளங்கோ, தேவிகா, கௌசல்யா மற்றும் நிதின் உள்ளிட்ட எட்டு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், முப்பது பேர் படுகாயமடைந்தனர்.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காகவும், உயிரிழந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்காகவும் அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில், முதலமைச்சர் முக. ஸ்டாலின் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "விபத்தில் எட்டு பேர் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்திகளை கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன்.

காயம் அடைந்தவர்களுக்கு சிறப்பு சிகிச்சை வழங்க அறிவுறுத்தி உள்ளேன். உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆறுதலையும் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்ச ரூபாயும், படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஒரு லட்ச ரூபாயும், லேசான காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா 50000 ரூபாயும் முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் வழங்க உத்தரவிட்டுள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
cm mk stalin financial announce to kunnur bus accident died peoples family