தமிழகத்தில் 717 டாஸ்மாக் கடைகள் மூடல்: மண்டல வாரியான முழு விவரம்!
Closure of 717 TASMAC Shops in TN Complete Region-wise Breakdown
தமிழக முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அரசு பதவியேற்றவுடன் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையாக, மாநிலம் முழுவதும் முதற்கட்டமாக 717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளிகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளுக்கு அருகிலுள்ள இந்தக் கடைகளை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தமிழகத்தின் 5 முக்கிய மண்டலங்களில் மூடப்படும் மதுக்கடைகளின் எண்ணிக்கை விவரம் வருமாறு:
1. மதுரை மண்டலம் (அதிகபட்சமாக 281 கடைகள்)
மதுரை மண்டலத்தில்தான் மிக அதிக எண்ணிக்கையிலான கடைகள் மூடப்படுகின்றன.
தூத்துக்குடி: 63
விருதுநகர்: 37
திருநெல்வேலி: 33
மதுரை தெற்கு: 32
ராமநாதபுரம்: 29
திண்டுக்கல்: 26
சிவகங்கை: 18
கன்னியாகுமரி: 18
மதுரை வடக்கு: 13
2. கோவை மண்டலம் (173 கடைகள்)
கோவை வடக்கு: 48
ஈரோடு: 39
திருப்பூர்: 30
நீலகிரி: 27
கோவை தெற்கு: 21
கரூர்: 8
3. சென்னை மண்டலம் (99 கடைகள்)
திருவள்ளூர் கிழக்கு: 29
சென்னை வடக்கு: 18
சென்னை மத்திய: 15
சென்னை தெற்கு: 14
காஞ்சீபுரம் வடக்கு: 12
காஞ்சீபுரம் தெற்கு: 7
திருவள்ளூர் மேற்கு: 4
4. திருச்சி மண்டலம் (84 கடைகள்)
கடலூர்: 21
திருச்சி: 16
புதுக்கோட்டை: 16
விழுப்புரம்: 11
தஞ்சாவூர்: 6
பெரம்பலூர்: 5
திருவாரூர்: 5
நாகப்பட்டினம்: 4
5. சேலம் மண்டலம் (80 கடைகள்)
திருவண்ணாமலை: 20
சேலம்: 20
நாமக்கல்: 14
தர்மபுரி: 7
அரக்கோணம்: 7
வேலூர்: 6
கிருஷ்ணகிரி: 6
நிர்வாக ரீதியிலான மாற்றம்:
இந்த அதிரடி நடவடிக்கைகளைத் தடையின்றிச் செயல்படுத்த ஏதுவாக, தமிழக அரசு டாஸ்மாக் நிறுவனத்தின் புதிய மேலாண் இயக்குனராக ஐஏஎஸ் அதிகாரி நந்தகுமாரை ஏற்கனவே நியமித்துள்ளது. முதலமைச்சரின் இந்த உத்தரவு, தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாகவும், சமூகப் பாதுகாப்பு மற்றும் அமைதியை உறுதிப்படுத்தும் வகையிலும் அமையும் எனப் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இக்கடைகள் அனைத்தும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முழுமையாக மூடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Closure of 717 TASMAC Shops in TN Complete Region-wise Breakdown