வெம்பக்கோட்டை அகழாய்வு - சுடுமண் காதணி கண்டெடுப்பு.!
clay earrings found in vembakottai excavation
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வெம்பக்கோட்டை அருகே விஜயகரிசல்குளத்தில் மூன்றாம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரைக்கும் 20 குழிகள் தோண்டப்பட்டு, அதிலிருந்து சுடுமண் முத்திரைகள், சுடுமண் பொம்மைகள், தீப விளக்குகள் உள்பட 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.
இந்த நிலையில் அகழாய்வில் முதன்முறையாக சுடுமண் காதணி சேதமடையாமல் முழுமையாக கிடைத்துள்ளது. மேலும், கண்ணாடி மணிகளும் கிடைத்துள்ளன. இது தொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்ததாவது:-
வெம்பக்கோட்டை அகழாய்வு தமிழரின் மரபையும், பெருமையையும் பறைசாற்றும் விதமாக திகழ்ந்து வருகிறது. அகழாய்வு பணிகள் நடந்து கொண்டிருக்கும் வேளையில், தற்போது முழுமையான சுடுமணி காதணி கண்டெடுக்கப்பட்டு உள்ளது.
அதும் இந்தக் காதணி சுடுமண்ணால் செய்யப்பட்டது என்பது கூடுதல் சிறப்பாகும். அதுமட்டுமல்லாமல் கலை நயத்துடன் அலங்கரிக்கப்பட்ட சங்கு வளையல் உடைந்த நிலையில் கிடைக்கப்பெற்றுள்ளது.
புகைப்படத்தில் இருக்கும் கண்ணாடி, சுடுமண்ணால் செய்யப்பட்ட பைக் கோன் என்று சொல்லக்கூடிய இருமுனை கூம்பும் கிடைத்துள்ளது. மேலும், சில மணிகளும் கிடைத்துள்ளன. இவை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழரின் வரலாற்று வாழ்வியல் தடயங்கள் ஆகும்" என்றுத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
clay earrings found in vembakottai excavation