'காலையில் தாலி, மாலையில் அடி-உதை'...! திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட புதுமாப்பிள்ளையால் அதிர்ச்சி...! - Seithipunal
Seithipunal


திருமணமான அன்றே புதுமணத் தம்பதிக்குள் ஏற்பட்ட மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில், திருமண வரவேற்பு நிகழ்ச்சியின்போது மதுபோதையில் இருந்த புதுமாப்பிள்ளை, தனது மனைவியையும் அவரது தந்தையையும் தாக்கியதாகப் புகார் எழுந்துள்ளது. காலையில் திருமண பந்தத்தில் இணைந்த காதல் ஜோடி, மாலையிலேயே பிரிந்து சென்ற சம்பவம் உறவினர்களிடையே அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் அருகே உள்ள ரீத்தாபுரத்தைச் சேர்ந்த 31 வயது இளைஞர் ஒருவர் ராணுவ வீரராகப் பணியாற்றி வருகிறார். இவர் கன்னியாகுமரி–கேரள எல்லைப் பகுதியான பாறசாலை அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 26 வயது இளம்பெண்ணைக் கடந்த நான்கு ஆண்டுகளாகக் காதலித்து வந்தார்.அந்த இளம்பெண் திருவனந்தபுரத்தில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் மருந்தாளுனராகப் பணியாற்றி வருகிறார்.

இருவரும் காதலித்து வந்த நிலையில், ஆரம்பத்தில் பெண் வீட்டார் இந்தத் திருமணத்துக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.இருப்பினும், பின்னர் இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்ததைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் பாறசாலையில் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.

இதையடுத்து, மாலையில் ரீத்தாபுரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் புதுமாப்பிள்ளையின் குடும்பத்தினர் சார்பில் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, மதுபோதையில் இருந்த புதுமாப்பிள்ளை, புதுப்பெண்ணின் தந்தையிடம் தகராறில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், புதுமாப்பிள்ளை தகாத வார்த்தைகளால் பேசியதுடன், புதுப்பெண்ணையும் அவரது தந்தையையும் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாகப் புகார் எழுந்துள்ளது.இந்தத் தாக்குதலில் காயமடைந்த புதுப்பெண்ணும் அவரது தந்தையும், இதுகுறித்து குளச்சல் காவலர்களிடம் புகார் அளித்தனர்.

திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் புதுமாப்பிள்ளையே மனைவியையும் மாமனாரையும் தாக்கியதாகக் கூறப்படும் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, புதுப்பெண்ணின் தந்தை அன்றிரவே தனது மகளைத் தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றார்.

இதனால், காலையில் திருமண பந்தத்தில் இணைந்த காதல் ஜோடி, மாலையில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சிக்குப் பிறகு பிரிந்து சென்றது.பல ஆண்டுகளாகக் காதலித்து, குடும்பத்தினரின் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்ட இருவரும், திருமணமான முதல் நாளிலேயே பிரிந்த சம்பவம் உறவினர்களையும் நண்பர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Clapping morning kicking evening Shocked by newlyweds who got drunken brawl wedding reception


கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!


செய்திகள்



Seithipunal
--> -->