கிடுகிடுவென உயரும் சன்ன ரக அரிசி விலை...! பொதுமக்களின் சுமையைக் குறைக்க தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை...! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் சன்ன ரக அரிசியின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், பொதுமக்களின் குடும்பச் செலவுகள் அதிகரித்துள்ளன. இதனால், அத்தியாவசிய உணவுப் பொருளான அரிசியை மலிவு விலையில் மக்களுக்கு வழங்கும் நோக்கில், கூட்டுறவு அங்காடிகள் வாயிலாக கிலோ ரூ.50-க்கும் குறைவான விலையில் அரிசியை விற்பனை செய்வது குறித்து தமிழக அரசு ஆலோசித்து வருகிறது.தமிழகத்தில் அரிசி வரத்து குறைந்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், அதன் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஒரு கிலோ ரூ.50 முதல் ரூ.60 வரை விற்பனையான சன்ன ரக அரிசி, தற்போது ரூ.70 முதல் ரூ.80 வரை விலை உயர்ந்துள்ளது. இதனால், அன்றாட உணவுத் தேவைக்காக அரிசி வாங்கும் குடும்பங்கள் கூடுதல் தொகையைச் செலவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அரிசி மட்டுமின்றி, பருப்பு வகைகள், சமையல் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து, உணவுத்துறை அமைச்சர் வெங்கடரமணன் தலைமையில் விலை கண்காணிப்புக் குழுவின் ஆய்வுக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது.இந்தக் கூட்டத்தில் தலைமைச் செயலாளர் சாய்குமார், உணவுத்துறை செயலாளர் அமுதா, நிதித்துறை செயலாளர் சித்திக் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அப்போது, அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வுக்கான காரணங்கள் மற்றும் அவற்றின் விற்பனை விலையைக் கட்டுக்குள் கொண்டுவர மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.இதுதொடர்பாக கூட்டுறவு மற்றும் உணவுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது,"தமிழகத்தில் சன்ன ரக அரிசியின் விலை அதிகரித்து வருவதால், பொதுமக்களுக்குக் குறைந்த விலையில் அரிசி கிடைப்பதை உறுதிப்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, இந்திய உணவுக் கழகம் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து சன்ன ரக அரிசியைக் கொள்முதல் செய்து, கூட்டுறவு அங்காடிகள் மூலம் கிலோ ரூ.40 முதல் ரூ.50 வரை விற்பனை செய்வது குறித்து தமிழக அரசு பரிசீலித்து வருகிறது.இதற்காக, எந்தெந்த மாநிலங்களில் இருந்து அரிசியைக் கொள்முதல் செய்ய முடியும், அங்கு கிடைக்கக்கூடிய அரிசியின் அளவு எவ்வளவு என்பது தொடர்பான விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

இந்த ஆய்வின் முடிவில், ஒரு லட்சம் டன் அரிசியைக் கொள்முதல் செய்வதற்கான வாய்ப்பு உறுதி செய்யப்பட்டால், கூட்டுறவு அங்காடிகள் வாயிலாக பொதுமக்களுக்கு மலிவு விலையில் அரிசி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.இதன் மூலம் சந்தையில் நிலவும் விலை உயர்வின் தாக்கத்தைக் குறைத்து, பொதுமக்களின் உணவுச் செலவைக் கட்டுப்படுத்த முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

price small rice increasing Action taken by Tamil Nadu Government to reduce burden public


கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!


செய்திகள்



Seithipunal
--> -->