மத்திய அமைச்சர் எல்.முருகன் திடீர் ராஜினாமா...! தமிழக மக்களின் அதிருப்தியே காரணமா...? - ஜோதிமணி பரபரப்புப் பேட்டி!
Union Minister L Murugan sudden resignation Is it because dissatisfaction people of Tamil Nadu Jyothimani sensational interview
மத்திய மந்திரிசபையில் இணை மந்திரியாகப் பணியாற்றி வந்த எல்.முருகன், தனது மந்திரி பதவியிலிருந்தும் மாநிலங்களவை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் திடீரென விலகியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசில் முக்கியப் பொறுப்பு வகித்து வந்த அவர், நேற்று இந்த முடிவை எடுத்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், அவரது பதவி விலகல் குறித்து காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி பல்வேறு கருத்துகளை முன்வைத்துள்ளார்.இதுகுறித்து ஜோதிமணி கூறியதாவது,"நானும், எல்.முருகனும் அண்டை மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால், அவர் மீது எனக்குத் தனிப்பட்ட முறையில் மரியாதை உண்டு.
ஆனால், தமிழக மக்களின் உணர்வுகளையும் உரிமைகளையும் பாதுகாக்கும் வகையில் அவர் ஒருபோதும் செயல்பட்டதில்லை.பா.ஜ.க.வினர் தமிழக மக்களின் நலன்களுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளனர்.
பிரதமர் மோடிக்கும், பா.ஜ.க.வுக்கும் தமிழக மக்கள் ஒருபோதும் சாதகமான பதிலை அளிக்க மாட்டார்கள் என்ற அரசியல் சூழல் நிலவுகிறது. இதன் காரணமாக, எல்.முருகன் தனது பதவியிலிருந்து விலகுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கலாம்.
இருப்பினும், மத்திய மந்திரிசபையில் தமிழகத்துக்குப் பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும் என்பதே எனது தனிப்பட்ட விருப்பமாகும்.இவ்வாறு ஜோதிமணி தெரிவித்துள்ளார்.
English Summary
Union Minister L Murugan sudden resignation Is it because dissatisfaction people of Tamil Nadu Jyothimani sensational interview