கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம்: கொந்தளித்த பொதுமக்கள்.. பின் வாங்கிய 'தமிழக அரசு'.!
Clambakkam buses not ply service road
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை இன்று ஆய்வு செய்த அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களை சந்தித்தபோது, கிளாம்பாக்கம் பேருந்துகள் பள்ளி நேரத்தில் சர்வீஸ் சாலையில் இயக்கப்படாது என தெரிவித்துள்ளார்.
கடந்த 2023 ஆம் ஆண்டு 30ஆம் தேதி அன்று தமிழக முதலமைச்சர் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
இன்றுடன் 6வது நாளாக கிளம்பாக்கம் பேருந்து நிலையம் செயல்பட்டு வருகிறது. தினம்தோறும் 5000க்கும் மேற்பட்ட பயணிகள் தற்போது கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
தினந்தோறும் துறையின் செயலாளர், துறையின் உறுப்பினர் செயலாளர், மாநகர ஆணையாளர் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகளின் தேவைகளை அறிந்து அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்யும் பணிகளை தொடர்ந்து மேற்கொள்கின்றனர்.

88 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த பேருந்து நிலையம் இந்தியாவிலேயே மிகப்பெரிய பேருந்து நிலையம் என கணக்கிடப்பட்டுள்ளது. இந்த பேருந்து நிலையம் திட்டமிடப்பட்ட காலத்திற்கும் தற்போது பயன்பாட்டிற்கு வந்த காலத்தை பார்க்கும்போது போக்குவரத்து அதிகரித்துள்ளதை உறுதி செய்கிறது.
இந்நிலையில் இன்று கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை ஆய்வு செய்த அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களை சந்தித்தபோது, கிளாம்பாக்கம் பேருந்துகள் பள்ளி நேரத்தில் சர்வீஸ் சாலையில் இயக்கப்படாது. நேற்று சர்வீஸ் சாலையில் சங்கர நேத்ராலயா பள்ளிக்கு செல்பவர்கள் எதிர்ப்புறமாக பாதையை பயன்படுத்திக் கொண்டிருந்தார்கள்.
இந்த பேருந்து நிலையம் பயன்பாட்டிற்கு வந்த பிறகு சர்வீஸ் சாலையின் வழியாக பேருந்துகள் வருவதால் இடையூறு இருப்பதாக பெற்றோர்கள் தெரிவித்ததை தொடர்ந்து தற்காலிகமாக பள்ளிக்கு பின்புறம் உள்ள ஒரு வழியை ஏற்படுத்தி தரவும், அதேபோல் பள்ளியின் காலை, மாலை நேரத்தில் சர்வீஸ் சாலையில் பேருந்துகள் அனுமதிக்க வேண்டாம் எனவும் தற்போது முடிவெடுக்கப்பட்டுள்ளது.
English Summary
Clambakkam buses not ply service road