கிளாம்பாக்கம் பேருந்து நிலைய நடை மேம்பாலம் - டெண்டர் வெளியீடு!  - Seithipunal
Seithipunal


கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையத்தை இணைக்கும் வகையில் நடை மேம்பாலம் அமைக்க டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது. 

கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு மாற்றாக அண்மையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்பட்டு நேற்று முதல் பரவலாக அனைத்து பேருந்துகளும் இயக்கப்படுகிறது. 

கிளாம்பாக்கம் பகுதிக்கு பொதுமக்கள் வந்து செல்லும் வசதிக்காக ரயில்வே நிர்வாகம் சார்பில் செங்கல்பட்டு-தாம்பரம் இடையே கிளாம்பாக்கம் பகுதியில் ரயில் நிலையம் அமைக்கக்கூடிய பணிகள் துவங்கியுள்ளது. 

அதற்கான டெண்டர் அறிவிப்புகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் கூடுதலாக ரயில் நிலையத்தில் இருந்து பேருந்து நிலையத்திற்கு பொதுமக்கள் மற்றும் பயணிகள் வந்து செல்லும் வசதியாக ஆகாய நடைமேடை அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. 

இது குறித்து செய்திகள் வெளியான நிலையில் தற்போது அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தையும் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தையும் இணைக்கும் வகையில் நடைபாலம் அமைப்பதற்கு டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது. 

ரயில் நிலையத்திலிருந்து பேருந்து நிலையத்தின் மையப்பகுதிக்கு 400 மீட்டர் நீளத்தில் இந்த ஆகாய நடை பாதை அமைக்கப்பட உள்ளது. 

இந்த பணியை சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் மேற்கொள்ள உள்ளது. குறிப்பாக நகரும் படிக்கட்டுகள் மற்றும் மின் தூக்கிகள் வசதிகளுடன் இந்த நடைபாதை அமைக்க ஒப்பந்த கோரப்பட்டுள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Clambakkam Bus Station Walk Over Tender Released


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->