குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட சினிமா நடிகர் - நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் அருகே சாலையூர் பகுதியைச் சேர்ந்தவர் ரியல் எஸ்டேட் அதிபர் சீனிவாசன். இவர் மனைவி கலையரசி. இவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 24ம் தேதி, தனது குழந்தைகளுடன் வீட்டில் இருந்துள்ளார். 

அப்போது, திடீரென வீட்டிற்குள் புகுந்த மர்ம கும்பல், குழந்தைகளின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி வீட்டில் இருந்த ரூ.18 லட்சம், 43 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து இதில் ஈடுபட்ட பதினாறு பேரை கைது செய்தனர். 

இந்த நிலையில் இந்த கொள்ளைக்கு திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை சேர்ந்த ஹரி என்பவர் மூலக காரணமாக செயல்பட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் இவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து போலீசார் குற்றச்செயலில் ஈடுபட்ட ஹரியை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய ஆட்சியரிடம் பரிந்துரை செய்துள்ளனர்.
அந்த பரிந்துரையின் படி, மாவட்ட ஆட்சியர் ஹரியை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். 

அதன் பின்னர் போலீசார் அவரை மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். சில சினிமா படங்களில் நடித்துள்ள ஹரி மீது ஆள் கடத்தல், கொள்ளை உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ciniema actor arrested in gangster law for robbery


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->