வடையில் கிடந்த பூரான் - அதிர்ச்சியில் வாடிக்கையாளர்.!
children admitted hospital for eat pooran insects vadai in dindukal
திண்டுக்கல் மாவட்டம் என்.ஜி.ஓ. காலனியை சேர்ந்த பியூலா என்ற பெண் தனது மூன்று வயது மகனுடன் அதே பகுதியில் உள்ள பேக்கரி ஒன்றில் குருமாவுடன் வடை வாங்கிச் சாப்பிட்டுள்ளார். அப்போது அந்த சிறுவன் சாப்பிட்ட வடையில் பூரான் ஒன்றுக் கிடந்துள்ளது.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த சிறுவன் தனது தாயிடம் தெரிவித்தார். உடனே அவர் கடைக்காரரிடம் வடையில் பூரான் கிடப்பதை காட்டி கேடுள்ளார். ஆனால் அவர்கள் முறையான பதில் அளிக்காமல் அலட்சியமாக பேசியுள்ளனர்.
இந்த நிலையில் சிறுவனுக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. உடனே அவர் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
பெரும்பாலான சாலையோர கடைகளில் உணவு பொருட்கள் தரையிலேயே வைக்கப்படுகின்றன. இதனால் பூச்சிகள் அதில் விழும் அபாயம் உள்ளது. இந்த உணவுகளை உண்பதால் பொதுமக்களுக்கு வயிற்று போக்கு உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டு வருகின்றது.
ஆகவே திண்டுக்கல் நகரில் உள்ள ஓட்டல்களை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனையிட்டு உணவின் தரத்தை உறுதி செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
English Summary
children admitted hospital for eat pooran insects vadai in dindukal