அரசு ஊழியர்களுக்கு முதல்வர் அதிரடி உத்தரவு..! - Seithipunal
Seithipunal


அரசு ஊழியர்கள்  வாரம் இருமுறை  கைத்தறி ஆடை அணிய வேண்டும்  என  முதல்வர் அதிரடி உத்தரவு..!

கைத்தறி  உற்பத்தியாளர்கள்   கொரானா காலத்தில் பெரும் பொருளாதார நட்டத்தையும் நலிவையும் சந்தித்துவரும் சூழலில் கைத்தறி  விற்பனையை ஊக்கப்படுத்தும் நோக்கில் அரசு ஊழியர்கள் வாரத்தில்  இரண்டு  நாட்கள் கைத்தறி ஆடையை உடுத்திக்கொண்டு அலுவலகம்  வர வேண்டும் என முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

என்னதான்  இயந்திரங்களைக் கொண்டு நெசவுத் தொழில் நடைபெற்றாலும்  காஞ்சிபுரம், ஆரணி போன்ற நகரங்களில்  நெசவுச் செய்யப்படும் கைத்தறி ஆடைகளுக்கான மதிப்பு இருக்கத்தான் செய்கின்றன. கைத்தறி ஆடைகளை  விரும்பி அணியும்  மக்கள் இருக்கின்றனர். இந்த நிலையில் கைத்தறி நெசவுத் தொழிலுக்கான மூலப்பொருள் விலையேற்றம் மற்றும் கொரானா நோய்த்தொற்றால் விற்பனையில் தேக்கம்  போன்றவை இருப்பதை அத்தொழிலில் ஈடுபட்டு வரும் நெசவாளர்கள் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.

இதன் காரணமாக,  கைத்தறி நெசவுத்தொழிலாளர்களைக் காக்கவும் கைத்தறி நெசவைக்காக்கவும்   இனி  அரசு ஊழியர்கள்   வாரத்தில் இரண்டு நாட்கள் கட்டாயம் கைத்தறி ஆடையை உடுத்தி வர வேண்டும் என முதல்வர் தற்போது உத்தரவிட்டுள்ளார். இந்த  அறிவிப்பு  அனைவரிடத்திலும்  நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chief Minister's Action order to Goverment Employees


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->