''வளரட்டும் சென்னைப் பெருநகரம்! உயரட்டும் மக்களின் வாழ்க்கைத்தரம்!'' சென்னை தினம் வாழ்த்துக்கள் கூறிய முதல்வர் விஜய்..!
Chief Minister Vijay congratulated Chennai Day
வருடந்தோறும் ஆகஸ்ட் 22, சென்னை தினம் கொட்டடப்படுகிறது. (மெட்ராஸ் தினம் என்றும் அழைக்கப்படுகிறது) 1639-இல் சென்னை நகரம் நிறுவப்பட்டதன் 387-வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், ஆகஸ்ட் 22, 2026 சென்னை தினம் கொண்டாடப்படுகிறது.
இந்த நாள், பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனிக்கு மெட்ராஸ்பட்டினம் நிலம் வரலாற்றுச் சிறப்புமிக்க வகையில் வழங்கப்பட்டதை நினைவுகூர்வதோடு, சென்னையின் வளமான பாரம்பரியம், கலாச்சாரம் மற்றும் பரிணாம வளர்ச்சியையும் எடுத்துக்காட்டுகிறது.
இந்த நாளில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் சென்னை தின வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளதாவது;
''வரலாற்றின் தடங்களைச் சுமந்தும், நவீனத்தின் வேகத்தோடு பயணித்து, தமிழகத்தின் வெற்றித் தலைநகராகத் திகழும் நம் சென்னையின் பெருமையைப் போற்றும் இந்நன்னாளில் அனைவருக்கும் எனது இனிய “சென்னை நாள்” நல்வாழ்த்துகள்!
வரலாற்றுச் சிறப்பும், பண்பாட்டுப் பெருமையும், கல்வி, மருத்துவம், தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பான வளர்ச்சியும், உழைப்பும், புதுமையும் சங்கமிக்கும் நகரமாக சென்னை விளங்குவதோடு, பல்வேறு மொழி, இன, பண்பாடுகளைச் சேர்ந்த மக்களை அரவணைத்து, அனைவருக்கும் வாய்ப்புகளை வழங்கும் மாநகரமாகவும் திகழ்கிறது.
சென்னையின் வரலாற்றுப் பெருமையையும் பண்பாட்டு அடையாளங்களையும் பாதுகாத்து, நவீன உட்கட்டமைப்புகளுடன் கூடிய உலகத்தரம் வாய்ந்த சீர்மிகு பெருநகராக சென்னையை மேலும் உயர்த்துவோம். அனைவருக்கும் சமவாய்ப்பும், பாதுகாப்பான சூழலும், வளமான வாழ்வும் கிடைத்திட உறுதியேற்போம்.
வளரட்டும் சென்னைப் பெருநகரம்!
உயரட்டும் மக்களின் வாழ்க்கைத்தரம்! '' என்று பதிவிட்டுள்ளார்.
English Summary
Chief Minister Vijay congratulated Chennai Day