தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள தமிழக ஆசிரியர்களுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து..! - Seithipunal
Seithipunal


ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழகத்தைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு முதல்வர் விஜய் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

இது குறித்து முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது;

''ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, இந்தியக் குடியரசுத் தலைவரால் வழங்கப்படும் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டின் புளியம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆசிரியர் தங்கராஜ் மற்றும் மதுரை, பிஎம் ஸ்ரீ கேந்திரிய வித்யாலயா பள்ளி ஆசிரியை அமுதா ஆகியோருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மாணவர்களின் எதிர்காலத்தை வடிவமைக்கும் உன்னதப் பணியை மேற்கொண்டு வரும் தங்களின் அர்ப்பணிப்பு, புதுமையான கற்பித்தல் முறைகள் மற்றும் மாணவர் நலனில் கொண்ட அக்கறைக்கு கிடைத்துள்ள இந்த உயரிய அங்கீகாரம், தமிழ்நாட்டின் கல்விச் சிறப்புக்கும், ஒட்டுமொத்த ஆசிரிய சமூகத்திற்கும் மேலும் பெருமை சேர்க்கிறது.

இந்த தேசிய விருது தங்களின் பணிக்கு மேலும் ஊக்கமளித்து, எண்ணற்ற மாணவர்களின் வாழ்க்கையில் ஒளியேற்றட்டும்! நல்வாழ்த்துகள்!'' எனத் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

CM Vijay congratulates Tamil Nadu teachers who have been selected for the National Good Teacher Award


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...




Seithipunal
--> -->