ராகுல் காந்தி நிகழ்ச்சியில் பங்கேற்க யூடியூப் பிரபலங்களுக்கு பணம் வழங்கப்படுகிறது: ஆடியோ ஆதாரத்தை வெளியிட்டுள்ள பாஜக..! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா​வின் புனே நகரில், காங்​கிரஸ் மூத்த தலை​வர் ராகுல் காந்தி, வினாத்​தாள் கசிவு, வேலை​வாய்ப்​பின்மை, கல்வி கட்டண உயர்வு உள்​ளிட்ட விவ​காரங்​கள் குறித்து இன்று, சுமார் 10,000 மாண​வியருடன் கலந்​துரை​யாட உள்ளார்.  

இந்நிலையில், ராகுல் காந்​தி​யின் புனே நிகழ்ச்​சி​யில் பங்​கேற்க யூடியூப், சமூக வலைதள பிரபலங்​களுக்கு காங்​கிரஸ் சார்​பில் பணம் வழங்​கப்​படு​கிறதாக பாஜக பகிரங்​க​மாக குற்​றம் சாட்டியுள்​ளது. அத்துடன், இதுதொடர்​பான ஆடியோ ஆதா​ரத்​தை​யும் பாஜக வெளி​யிட்டுள்ளது. 

இது குறித்து மகா​ராஷ்டி​ராவை சேர்ந்த பெண் சமூகவலைதள பிரபலத்​தை, சாந்​தனு என்ற நபர் அண்​மை​யில் மொபைல்​போனில் தொடர்பு கொண்​டார். அப்போது ராகுல் காந்​தி​யின் புனே நிகழ்ச்​சி​யில் அந்த பெண் பிரபலம் பங்​கேற்க அழைப்பு விடுத்த சாந்​தனு, அதற்​காக ரூ.25,000 பணம் வழங்​கு​வ​தாக உறுதி அளித்​த்துள்ளார்.

மொபைல் போனில் இரு​வர் இடையி​லான ஆடியோ உரை​யாடலை பாஜக நேற்று தனது சமூக வலை​தளத்​தில் வெளி​யிட்​டது. அத்துடன், அந்த பதி​வில், ''ராகுல் காந்​தி​யின் தலைமை மிக​வும் பலவீன​மாக இருக்​கிறது. இதனால் பணம் கொடுத்து கூட்​டம் சேர்க்​கப்​படு​கிறது.'' என்​று தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

BJP releases audio evidence of YouTube celebrities being paid to appear on Rahul Gandhis show


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...


செய்திகள்



Seithipunal
--> -->