'தலைமைச் செயலாளர் பதவியில் நீடிக்கத் தகுதியற்றவர்'; அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இன்று கண்டன ஆர்ப்​பாட்​டம்; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அறிவிப்பு..! - Seithipunal
Seithipunal


தலை​மைச் செயலர், குஜிலி​யம்​பாறை வட்​டாட்​சி​யர் மீது நடவடிக்கை எடுக்​கப்பட வேண்​டும் என்று வலி​யுறுத்தி அனைத்து மாவட்​டங்​களி​லும் இன்று (ஆகஸ்ட்22) கண்டன ஆர்ப்​பாட்​டம் நடை​பெறும்​ என மார்க்​சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செய​லா​ளர் பெ.சண்​முகம் அறிக்கை வெளி​யிட்டுள்ளார்.

அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது;

''இடது​சாரி கட்​சிகள், கரப்​பான் பூச்சி அமைப்​பினர் நடந்​தும் போராட்​டங்​களில் மாணவர்​கள் பங்​கெடுப்​பதை தடுக்​கும் வகை​யில் பள்​ளிக்​கல்​வி, உயர்​கல்​வி, காவல்​துறை, மாவட்ட நிர்​வாகம் இடையே ஒருங்​கிணைந்த கூட்டு நடவடிக்கை மேற்​கொள்​ளு​மாறு கல்​லூரிக் கல்வி இயக்​குநர் சுற்​றறிக்கை அனுப்​பி​யுள்​ளார்.

தலை​மைச் செயலர் எம்​.​சாய்குமார்தான் இதை வலி​யுறுத்​தி​யுள்​ளார். அதே​போல் குஜிலி​யம்​பாறை வட்​டாட்​சி​யர் பிரச்​சினை குறித்து சட்​டப்​பேர​வை​யில் பேசிய வரு​வாய்த்​துறை அமைச்​சர் நடவடிக்கை எடுத்​துக் கொண்​டிருக்​கிறோம் என்று குறிப்​பிட்​டார்.

ஆனால், பயிற்சி முடிந்து விட்​ட​தால் பேரிடர் மேலாண்மை ஆணை​யரகத்​தில் பணி​யில் சேர்​வதற்​காக சம்​பந்​தப்​பட்ட வட்​டாட்​சி​யர் விடுவிக்கப்​பட்​ட​தாக ஆட்​சி​யரின் குறிப்​பு கூறுகிறது.

அடுத்​தடுத்து இடது​சா​ரி​கள் குறிவைக்​கப்​படு​வது தற்​செய​லானது அல்ல. தலை​மைச் செயலர், குஜிலி​யம்​பாறை வட்​டாட்​சி​யர் மீது நடவடிக்கை எடுக்​கப்பட வேண்​டும்.

இதை வலி​யுறுத்தி அனைத்து மாவட்​டங்​களி​லும் இன்று (ஆக.22) கண்டன ஆர்ப்​பாட்​டம் நடை​பெறும்​.'' என்று அறிக்கையில்​ தெரிவித்​துள்​ளார்​.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Marxist Communist Party of India issues statement demanding action against Chief Secretary


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...


செய்திகள்



Seithipunal
--> -->