செல்போன் திருட்டு; கோவையில் 4 பேரால் தாக்கப்பட்ட இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு..!
Youth killed after being attacked by 4 people in Coimbatore
கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள சாமநாயக்கன் பாளையம் ஜெ.ஜெ.நகரைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மனைவி கிரிஜா. கூலித்தொழிலாளியான இவர்களது மகன் பிரதீப்குமார் (34). திருமணமாகாத இவரும் கூலி வேலைக்கு சென்று வந்துள்ளார்.
கடந்த 17-ஆம் தேதி சாமநாயக்கன்பாளையம் விஜிபி கார்டன் பகுதியில் நான்கு பேர் கும்பலாக சேர்ந்து பிரதீப்குமாரை செல்போனை திருடியதாக கூறி தாக்கியுள்ளனர். தாக்கியுள்ளனர். இதுகுறித்து உறவினர் ஒருவர் மூலம் தகவல் அறிந்த தாய் கிரிஜா அங்கு சென்று தனது மகனை மீட்டு பெரியநாயக்கன் பாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.
அதன் பின்னர், மேலதிக சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் பிரதீப்குமார் அனுமதிக்கப்பட்டார். இந்த தாக்குதல் சம்பவம் குறித்து கிரிஜா பெரியநாயக்கன் பாளையம் போலீஸாரிடம் புகார் அளித்ததன் பேரில், போலீஸார் விசாரணை நடத்தினர்.

விசாரணையின் படி, பிரதீப்குமாரை சாமநாயக்கன்பாளையம் பூங்கா நகரை சேர்ந்த கார்த்தி்க் (44), பிரகாஷ் (26), ஹரிகிருஷ்ணன் (23), சிவா (24) ஆகியோர் தாக்கியமை தெரியவந்தது.
அதாவது, செல்போன் விவகாரத்தால் இவர்கள் நால்வரும் பிரதீப்குமாரை சரமாரியாக தாக்கியதாகவும், இவர்கள் மீது போலீஸார் கொலை முயற்சி வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர்.
இந்நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரதீப்குமார் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதையடுத்து கொலை முயற்சி வழக்கை, கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
English Summary
Youth killed after being attacked by 4 people in Coimbatore