அரசு பள்ளிகள் நம் பெருமையின் அடையாளம் என உரக்கச் சொல்வோம் - மு.க. ஸ்டாலின்.! - Seithipunal
Seithipunal


தமிழகம் முழுவதும் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகளில் 22,931 ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளது. இதைக் குறிப்பிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில் அவர் தெரிவித்து இருப்பதாவது:- "தமிழ்நாடு முழுவதும் அரசு தொடக்கப் பள்ளிகளில் 22,931 SmartClassroom அமைக்கும் பணியைக் கடந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கி வைத்தேன்.

அந்தப் பணி, இன்று சென்னை ஒக்கியம் துரைப்பாக்கம் அரசுப் பள்ளியில் நிறைவுபெற்றிருப்பதைத் தம்பி அன்பில் மகேஷ் அவர்கள் தொலைபேசியில் என்னிடம் தெரிவித்தார்.

நவீனமயமான தொடக்கப் பள்ளிகள், நாட்டின் முதன்மையான உயர்கல்வி நிறுவனங்களில் நம் மாணவர்கள் இடம்பெற உதவும் #ModelSchools எனப் பள்ளிக்கல்வித் துறை படைத்து வரும் சாதனைகளால் மகிழ்கிறேன்!

அரசுப் பள்ளிகள் நம் பெருமையின் அடையாளம் என்று உரக்கச் சொல்வோம்" என்றுத் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

chief minister mk stalin tweet about smartclassroom work


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->