மனிதனுக்கு பன்றி நுரையீரல் மாற்று சிகிச்சை: சீன மருத்துவர்கள் சாதனை..!
Chinese doctors achieve breakthrough by transplanting pig lungs into human
சீனாவின் குவாங்ஜோவில் உள்ள மருத்துவப் பல்கலை மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த நபருக்கு பன்றியின் நுரையீரலை வெற்றிகரமாக பொருத்தி அதன் இயக்கத்தை மருத்துவர் குழு ஆய்வு செய்துள்ளது.
நுரையீரல் மருத்துவ நிபுணர் ஜியான்ஷிங் ஹே தலைமையில் இந்த சோதனை முறையிலான அறுவை சிகிச்சை நடந்துள்ளது. இதற்காக சீனாவின் பாமா சியாங் பன்றியின் நுரையீரல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது அளவில் மனித நுரையீரல் அளவைக் கொண்டிருந்தது. மனித உடலின் நோய் எதிர்ப்பு அமைப்புக்கு ஏற்றவாறு பன்றியின் நுரையீரலில் மரபணு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
அதன் பின்னர் குறித்த பன்றின் நுரையீரல் 39 வயதான மூளை சாவு அடைந்த நபருக்கு பொருத்தப்பட்டுள்ளது. அதாவது, மூளை சாவு என்பது மூளையை தவிர பிற உடல் உள்ளுறுப்புகள் இயங்கும். எனவே பன்றியின் நுரையீரல் சோதனை அடிப்படையில் அவருக்கு பொருத்தி, சுவாச குழாய் மற்றும் ரத்த நாளங்களுடன் இணைக்கப்பட்ட நிலையில், அது 09 நாட்கள் வரை இயங்கியுள்ளது.

பரிசோதனையின் ஆரம்பத்தில் பிராண வாயுக்களை பரிமாற்றி ரத்த ஆக்சிஜன் அளவை உடலில் சகஜமாக வைத்திருந்தது. 24 மணி நேரத்துக்கு பின் நுரையீரலில் திரவம் சேர தொடங்கியது. மூன்று முதல் ஆறு நாட்களில் நோய் எதிர்ப்பு திசு சேதமடைந்துள்ளதால், ஒன்பது நாளுடன் சோதனை நிறுத்தப்பட்ட்டுள்ளது.
அத்துடன், இது தொடர்பான ஆராய்ச்சிகளை சீன மருத்துவர்கள் மேற்கொண்டுவருவதாக தெரியவருகிறது. இதற்கு முன்னர் அமெரிக்காவில், டிம் ஆண்ட்ரூஸ் என்ற 67 வயது நபருக்கு கடந்த மார்ச்சில் மரபணு மாற்றப்பட்ட பன்றி சிறுநீரகம் பொருத்தப்பட்டது. அவர் பின்னர் ஆறு மாதங்களுக்கு மேல் உயிருடன் இருந்தமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Chinese doctors achieve breakthrough by transplanting pig lungs into human