எம்.ஆர்.ராதாவின் மனைவியும், நடிகை ராதிகாவின் தாயுமான கீதா காலமானார்..!
Actress Radhikas mother Geetha passes away
மறைந்த நடிகர் எம்.ஆர்.ராதாவின் மனைவியும், நடிகை ராதிகா மற்றும் நிரோஷா ஆகியோரின் தாயாருமான கீதா ராதா வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக தனது 86 வயதில் இன்று காலமாகியுள்ளார்.
சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் அவருடைய உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இவரின் மறைக்கு திரைத்துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கீதா ராதாவின் உடலுக்கு திரைத்துறையினர் பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நாளை (22.09.25) மாலை 04.30 மணி அளவில் பெசன்ட் நகர் மின் மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து நடிகை ராதிகா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

'மறைந்த நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் மனைவியும், எனது தாயாருமான கீதா ராதா (வயது 86) இன்று (21.09.2025) ஞாயிற்றுக்கிழமை மாலை மணிக்கு உடல் நலக்குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக காலமானார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
அவரது உடல் இறுதி மரியாதை செலுத்துவதற்காக எண் 3, பின்னி ரோடு, மனசாரவா அபார்ட்மெண்ட், போயஸ் கார்டன், சென்னை - 86 இல் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அன்னாரது இறுதி சடங்கு நாளை மாலை 04.30 மணிக்கு மேல் பெசன்ட்நகர் மின்மயானத்தில் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.' என்று குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Actress Radhikas mother Geetha passes away