முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜெர்மனி, இங்கிலாந்து பயணம்!
Chief Minister MK Stalin to visit Germany and England to attract investments
தமிழ்நாட்டிற்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று முதல் ஒரு வாரத்திற்கு ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார்.
இந்த பயணத்தின் போது, ஜெர்மனி மற்றும் இங்கிலாந்தில் பல்வேறு தொழில் நிறுவனங்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகளுடன் முதலமைச்சர் கலந்துரையாட உள்ளார். மேலும், தமிழ்நாட்டில் தொழில்துறை வளர்ச்சியை முன்னேற்றும் விதமாக, பல முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MoU) கையெழுத்தாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியை வலுப்படுத்தவும், வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் முதலமைச்சர் ஸ்டாலின் தொடர்ந்து வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். இதற்காக அவர் முன்னதாக பல முறை வெளிநாடு பயணம் மேற்கொண்டிருந்தார்.
தற்போது நடைபெறும் இந்த பயணம், முதலமைச்சர் ஸ்டாலினின் 5வது வெளிநாட்டு முதலீட்டு பயணம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
English Summary
Chief Minister MK Stalin to visit Germany and England to attract investments