இறகுபந்து போட்டியில் உயிரிழந்த வட்டாச்சியர் அதியமான் மறைவுக்கு மு.க ஸ்டாலின் இரங்கல்.! - Seithipunal
Seithipunal


தருமபுரி மாவட்டத்தில் முதலமைச்சர் கோப்பைக்கான இறகுப்பந்து போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் வட்டாட்சியர் அதியமான் கலந்துக் கொண்டு விளையாடினார். அப்போது அவருக்குத் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

இந்த நிலையில் இவருடைய மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:- 

"தருமபுரி மாவட்டத்தில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பைக்கான இறகுப்பந்து போட்டியில் பங்கேற்று விளையாடிக் கொண்டிருந்தபோது வட்டாட்சியர் அதியமான் மாரடைப்பால் உயிரிழந்தார் என்ற செய்தி மிகவும் வேதனை அளிக்கிறது. 

அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அரசு ஊழியர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

chief minister mk stalin condoles to district minister died in vollyball match


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->