சென்னிமலை முருகன் கோவிலில் ''கியூ ஆர் கோடு'' மூலம் நன்கொடைகள்! - Seithipunal
Seithipunal


சென்னிமலை முருகன் கோவிலுக்கு தமிழக முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் நாள்தோறும் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். 

வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை, சஷ்டி, கிருத்திகை, அமாவாசை போன்ற விழா காலங்களில் அதிக அளவிலான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து முருக பெருமானை வணங்குகின்றனர். 

தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் தரிசனத்திற்கு தனியாகவும், நன்கொடை செலுத்துவதற்கு தனியாகவும் வரிசையில் காத்திருக்கின்றனர். இது பக்தர்களிடையே சிரமத்தை ஏற்படுத்துகிறது. 

இதனால் பக்தர்கள் சிரமமில்லாமல் நன்கொடைகளை செலுத்த க்யூ ஆர் கோடு வசதியை இன்று சமய அறநிலையத்துறை அதிகாரிகள் செய்துள்ளனர். 

மேலும் நன்கொடை வழங்கும் பக்தர்களுக்கு அது தொடர்பான தகவல்களை மொபைல் எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. 

இதன் மூலம் பக்தர்கள் விரைவில் நன்கொடையை செலுத்த முடியும் என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennimalai murugan temple introduction QR line


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->