சகோதரிக்கு பாலியல் தொல்லை.. கொதித்தெழுந்த இரத்தம்.. யானைக்கவுனி மூவர் கொலையில் அதிர்ச்சி திருப்பம்..! - Seithipunal
Seithipunal


சென்னையில் உள்ள யானைக்கவுனி விநாயகர் மேஸ்திரி தெரு பகுதியை சார்ந்தவர் தலில் சந்த் (வயது 74). இவரது மனைவி புஷ்பா பாய் (வயது 70). இவர்களுக்கு ஷீத்தல் என்ற 38 வயது மகனும், பிங்கி என்ற 35 வயது மகளும் உள்ளனர். தலில் சொந்தமாக பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். 

ஷீத்தல் மகாராஷ்டிரா மாநிலத்தை சார்ந்த ஜெயமாலா என்ற பெண்மணியை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, ஜெயமாலா கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னதாக கணவரை பிரிந்து புனே சென்றுள்ளார். கணவரிடம் விவகாரத்து கோரியும், ரூ.5 இலட்சம் ஜீவமிசனம் கேட்டும் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த நிலையில், இதனால் இவர்களுக்குள் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. 

சம்பவத்தன்று தலீல் சந்த், புஷ்பா, ஷீத்தல் ஆகிய மூவரும் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து இரத்த வெள்ளத்தில் பிணமாக இருந்துள்ளனர். இவர்களின் உடலை மீட்ட காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்ட விசாரணைக்கு பின்னர், ஜெயமாலாவின் சகோதரர்கள் மற்றும் உறவினர்கள் தலீலின் குடும்பத்தினரை சுட்டு கொலை செய்தது தெரியவந்தது. கொலையாளிகளை பிடிக்க தனிப்படை காவல்துறையினர் புனேவில் வைத்து கைது செய்தனர்.

இந்நிலையில், ஜெயமாலாவிற்கு ஷீத்தலின் குடும்பத்தினர் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், இந்த விஷயத்தை அறிந்த ஷீத்தல் கண்டுகொள்ளாமல் இருந்தார். இதனை ஜெயமாலா எங்களிடம் தெரிவித்ததும், எங்களுக்கு ஏற்பட்ட ஆத்திரத்தால், அவர்களை குடும்பத்துடன் கொலை செய்ய திட்டமிட்டு, நட்பாக பழகிய முன்னாள் விமானப்படை அதிகாரியிடம் இருந்து கார் மற்றும் அவரது உரிமம் பெற்ற துப்பாக்கியை வைத்தும், நாட்டு துப்பாக்கி வைத்தும் கொலை செய்தோம் என்ற வாக்குமூலத்தை ஜெயமாலாவின் சகோதரர் கைலாஷ் தெரிவித்துள்ளார். தற்போது வரை ஜெயமாலா தலைமறைவாக உள்ள நிலையில், அவரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai Yanai Kavuni Murder Issue Mystery Tragedy


கருத்துக் கணிப்பு

2021-ல் தமிழகத்தில் முழு மதுவிலக்குAdvertisement

கருத்துக் கணிப்பு

2021-ல் தமிழகத்தில் முழு மதுவிலக்கு
Seithipunal