போலி திருமண சான்றிதழ் தயாரிக்க சித்து வேலை.. திரௌபதி படத்தை மிஞ்சும் நிஜ சம்பவம்..! - Seithipunal
Seithipunal


சென்னையில் உள்ள விருகம்பாக்கம் மீனாட்சி கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் துறையில் உதவிப் பேராசிரியராக பணியாற்றி வந்தவன் சதீஷ்குமார். இவன் அங்குள்ள ஐயப்பன்தாங்கல் பகுதியை சேர்ந்தவன். இவனுக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து மனைவி மற்றும் குழந்தைகள் உள்ள நிலையில், தனது வகுப்பறையில் பயின்று வந்த மாணவி மீது காதல் வயப்பட்டுள்ளான். 

இதனையடுத்து, சதீஷ்குமார் மாணவியிடம் அவ்வப்போது காதலிப்பதாக காதல் தொல்லை கொடுத்து வந்துள்ளான். இதற்கு மாணவி மறுப்பு தெரிவித்த நிலையில், காமுகனின் எண்ணத்தை புரிந்து கொண்ட மாணவி சுதாரிப்பாக கல்லூரிக்கு சென்று வந்துள்ளார். 

இந்நிலையில், தனது ஒருதலைக் காதலில் உறுதியாக இருந்த காமுகன், மாணவிக்கு தொடர்ந்து காதல் தொல்லை கொடுத்து வந்தவாறு இருந்துள்ளான். மேலும், சதீஷ்க்கு ஏற்கனவே திருமணம் முடிந்து குழந்தை இருப்பதை மறைத்து, மாணவியை காதலிப்பதாக காதல் வலை வீசி வந்துள்ளான். இதனையறிந்த மாணவி உங்களுக்கு ஏற்கனவே திருமணம் நடைபெற்று முடிந்துவிட்டது, குழந்தையும் உள்ளது என்று சுட்டிக்காட்டி எடுத்து கூறியுள்ளார். 

இதனைகேட்காத காமுகன் பேராசிரியர் என்ற போர்வையைப் பயன்படுத்திக் கொண்டு, மாணவியின் குடும்பத்தினரிடம் சகஜமாக குடும்ப நண்பர் போல பழகி வந்து தனது இச்சையை நிறைவேற்றிக் கொள்ளும் வேளையில் இறங்கியுள்ளான். இந்நிலையில், மாணவியின் கல்வி சான்றிதழ்களை திருடி, இருவரும் பதிவு திருமணம் நடந்தது போல போலியான சான்றிதழ் தயார் செய்து மாணவியை மிரட்டியுள்ளான். 

இதுதொடர்பான விஷயம் பெருமளவு நடந்து வரும் நிலையில், திரௌபதி திரைப்படத்தில் இது வெளிப்படையாக காட்டப்பட்டு, பல நாடகக்காதல் கும்பல்களுக்கு பெரும் அதிர்ச்சியை தந்தது. இதனால் நாடகக்காதல் கும்பல்கள் திரௌபதி திரைப்படத்தை எதிர்த்து குறிப்பிடத்தக்கது. 

பேராசிரியர் மிரட்டலுக்கு அடிபணியாத மாணவி, உன்னால் முடிந்ததை பார்த்துக் கொள் என்று கூறி எச்சரிக்கவே, காமுகன் மாணவியின் குடும்பத்தினர் வாட்ஸ் அப்பிற்கு போலி திருமண சான்றிதழை அனுப்பி வைத்துள்ளான். மேலும், தன்னுடன் சேர்ந்து வாழவில்லை என்றால், இதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வாழ்க்கையையே சீரழித்து விடுவேன் என்று மிரட்டியுள்ளான். 

இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி தியாகராயநகர் துணை ஆணையரை சந்தித்து நடந்தவற்றை கூறியுள்ளார். இதையடுத்து, இதுதொடர்பான புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர், விசாரணை செய்ததில் போலி திருமணச்சான்று பதிவு செய்தது கண்டறியப்பட்டுள்ளது. இதன்பின்னர் உதவிப் பேராசிரியர் சதீஷ்குமார் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அவனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Chennai Virugambakkam Drama Love Culprit Sathish Kumar Create Fake Marriage Certificate Threat student


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->