#சென்னை || பள்ளி பேருந்து சக்கரத்தில் சிக்கி பலியான மாணவன்.! பெரும் அதிர்ச்சியான சம்பவம்.
chennai vengadeshvara private school bus accident
சென்னை அருகே தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு பயின்று வந்த எட்டு வயது மாணவன் தீட்சித், பள்ளி வாகனத்தின் சக்கரத்தில் சிக்கி பலியாகியுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.
சென்னை : வளசரவாக்கம், ஆழ்வார் திருநகரில் உள்ள வெங்கடேஸ்வரா தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு பயின்று வந்த எட்டு வயது மாணவன் தீட்சித், பள்ளி வாகனத்தின் சக்கரத்தில் சிக்கி பலியாகி உள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.
இன்று காலை மாணவன் தீட்சித், தனது பள்ளி வாகனத்தில் சக மாணவர்களுடன் பள்ளி வளாகத்திற்கு வந்துள்ளார் பள்ளி வாகனம் நிறுத்தியவுடன் மாணவர்கள் வாகனத்திலிருந்து வெளியாகினர்.

அப்போது மாணவன் பள்ளி வாகனத்தின் முன்பக்கமாக நின்று கொண்டிருந்தபோது, வாகனத்தின் ஓட்டுநர் மாணவனைக் கவனிக்காமல் வாகனத்தை வேகமாக எடுத்துள்ளார். இதில் மாணவன் தீட்சித் வாகன சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மாணவன் தீட்சித்தின் பெற்றோர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் பள்ளி நிர்வாகம் மற்றும் வாகனத்தை இயக்கிய ஓட்டுனர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
chennai vengadeshvara private school bus accident