போட்டி போட்ட ரேஸால் பரிதாபமாக பறிபோன உயிர்கள்?.. பாலத்தின் மேலே இருந்து கீழே விழுந்து அரங்கேறிய துயரம்.! - Seithipunal
Seithipunal


சென்னையில் உள்ள திருவெற்றியூர் பகுதியை சார்ந்தவர் பாலாஜி (வயது 53). இவர் சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறையில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி உஷா (வயது 48). நேற்று மதியம் கணவன் - மனைவி இருவரும் இருசக்கர வாகனத்தில் புரசைவாக்கம் பகுதிக்கு சென்றுள்ளனர். 

பின்னர் அங்கிருந்து வீட்டிற்கு திரும்பிக்கொண்டு இருந்த நிலையில், ஓட்டேரி வழியாக பெரம்பூர் நோக்கி செல்லும் முரசொலிமாறன் மேம்பாலத்தில் சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக சாலையின் தடுப்பு சுவரில் மோதிய தம்பதிகள் இருவரும், வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டுள்ளனர். 

இந்த விபத்தில், தம்பதிகள் இருவரும் 30 அடி உயர மேம்பாலத்தில் இருந்து கீழேயுள்ள சாலையில் விழுந்தனர். வாகனம் மேம்பாலத்திலேயே கிடந்த நிலயில், படுகாயமடைந்த உஷா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

உயிருக்கு போராடிதுடித்த பாலாஜியை மீட்ட பொதுமக்கள், கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பாலாஜியும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர், அப்பகுதியில் சட்டவிரோதமாக ரேஸில் ஈடுபட்ட வாலிபர்கள் கொடுத்த பதற்றத்தால் விபத்து ஏற்பட்டதா? என்ற கோணத்திலும் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai Thiruvetriyur couple died slipped from Bridge


கருத்துக் கணிப்பு

வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி?!Advertisement

கருத்துக் கணிப்பு

வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி?!
Seithipunal