சென்னை: சீரியல் நடிகரின் கள்ளக்காதல் சோகங்கள்.. ஆட்டோவில் வந்து அரங்கேறிய பரபரப்பு சம்பவம்.! - Seithipunal
Seithipunal


சென்னையில் உள்ள எம்.ஜி.ஆர் நகர் பாரிவள்ளல் தெருவை சார்ந்தவர் செல்வரத்தினம் (வயது 41). இவர் இலங்கையை சார்ந்தவர். தமிழ் திரையுலகில் பல நாடகங்களை தொகுத்து வழங்கி வரும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தொடரில் நடித்து வந்தார். இவர் தனது 3 குழந்தைகளை விருதுநகரில் இருக்கும் இலங்கை அகதிகள் முகாமில் தங்க வைத்துள்ளார். 

செல்வரத்தினம் மட்டும் சென்னையில் உள்ள எம்.ஜி.ஆர் நகரில் தங்கியிருந்து தொலைக்காட்சி தொடரில் நடித்து வந்த நிலையில், நேற்று முன்தினம் காலை 7 மணியளவில் வீட்டிற்கு அருகே நடந்து சென்று கொண்டு இருந்துள்ளார். அப்போது இவருக்கு பின்னால் வந்த மர்ம நபர், செல்வரத்தினத்தை சரமாரியாக வெட்டி கொலை செய்தார். இதில் சம்பவ இடத்திலேயே செல்வரத்தினம் பரிதாபமாக உயிரிழந்தார்.

கொலையை அரங்கேற்றி ஆட்டோவில் தப்பி சென்ற நிலையில், இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர் செல்வரெத்தினத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து மேற்கொண்ட விசாரணையில், கள்ளக்காதல் பிரச்சனையால் கொலை அரங்கேறியுள்ளது தெரியவந்தது.

விருதுநகரை சார்ந்த தனது நண்பரான விஜயகுமார் என்பவரின் மனைவி டயானாவுடன் செல்வரத்தினம் கள்ளக்காதல் தொடர்பில் இருந்துள்ளார். இந்த விஷயத்தை அறிந்த விஜயகுமார் பலமுறை கண்டிக்கவே, விஜயகுமாரின் மனைவி சேலத்தில் பணியாற்றி வந்தபோதும் இருவரும் காரில் புதுச்சேரிக்கு சென்று உல்லாசமாக இருப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். இதனால் காலையில் இக்கொலை அரங்கேறியுள்ளது தெரியவந்துள்ளது.

விஜயகுமாரை தனிப்படை காவல் துறையினர், விருதுநகரில் வைத்து கைது செய்துள்ளனர். இவரிடம் மேற்கொண்ட விசாரணையில், " நானும் இலங்கையை சார்ந்தவன். எனக்கு 3 குழந்தைகள் உள்ளனர். விருதுநகர் அகதிகள் முகாமில் இருக்கையில், எனது மனைவி டயானா மற்றும் செல்வரெத்தினத்திற்கு இடையே பழக்கம் ஏற்பட்டது. இதனை அறிந்த நான் அவர்களை கண்டித்தேன். இதன்பின்னர் செல்வரத்தினம் தொலைக்காட்சி சீரியலில் நடிக்க சென்னை வந்துவிட்டார். 

இதன்பின்னரும் இருவரும் கள்ளக்காதல் தொடர்பை கைவிடாத நிலையில், தீபாவளியன்று டயானா அறந்தாங்கிக்கு செல்வதாக கூறி சென்னையில் உல்லாசமாக இருந்திருப்பார்கள் என்று எண்ணினேன். ஆனால், எனது மனைவி சென்னைக்கு வரவில்லை. இருந்தாலும், கள்ளக்காதலை கைவிடாத செல்வரெத்தினத்தின் மீது எனக்கு இருந்த ஆத்திரத்தால், ஆட்டோவில் அவரது இல்லத்திற்கு சென்று கொலை செய்துவிட்டு சென்னையில் இருந்து தப்பி விருதுநகர் வந்தேன் " என்று தெரிவித்தார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai Serial Actor Murder due to Affair Problem 17 November 2020


கருத்துக் கணிப்பு

வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி?!Advertisement

கருத்துக் கணிப்பு

வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி?!
Seithipunal