நூதன முறையில் கூலித்தொழிலாளர்கள் செல்போன் திருட்டு.. மக்களே உஷார்.. வேலைகொடுப்பதாக பலே ஏமாத்து வேலை.! - Seithipunal
Seithipunal


சென்னையில் உள்ள பூக்கடை, சவுகார்பேட்டை, பூங்காநகர் பகுதியில் இருக்கும் கூலித்தொழிலாளர்கள், பூக்கடை பகுதிக்கு வருகை தந்து பின்னர் மேற்பார்வையாளரின் அறிவுரைப்படி கட்டிட வேலை, கார்பெண்டர் மற்றும் பெயின்டிங் போன்ற பணிகளுக்கு செல்வது வழக்கம். 

இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்னதாக வழக்கம்போல பூக்கடை பகுதிக்கு வருகை தந்த இவர்களிடம், பழைய வீட்டினை இடித்து அகற்ற வேண்டும் என்று கூறி 11 தொழிலாளர்களை ஒருவர் அழைத்து சென்றுள்ளார். 

இதனையடுத்து, பாழடைந்த வீட்டிற்கு சென்று வீட்டினை காண்பித்த நிலையில், தங்களின் அலைபேசி மற்றும் உடமையை கொடுத்தால் பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சென்று வைப்பதாக வாங்கிவிட்டு சென்றவர், நீண்ட நேரம் ஆகியும் திரும்ப வரவில்லை. 

காத்திருந்த தொழிலாளர்கள், தாங்கள் ஏமாற்றப்பட்டுள்ளதை உணர்ந்து பூக்கடை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் பேரில் விசாரணை செய்த காவல் துறையினர், விருத்தாச்சலம் பகுதியை சார்ந்த சுரேஷ் (வயது 32), தண்டையார்பேட்டை பகுதியை சார்ந்த சித்திக் (வயது 53), முகமது (வயது 63) ஆகியோரை கைது செய்துள்ளனர். மேலும், நூதன முறையில் இவர்கள் கொள்ளையடித்தது தெரியவந்த நிலையில், தற்போது சிறையில் கம்பி எண்ணிக்கொண்டு இருக்கின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai Police Arrest Culprit Theft Mobile Using Innovative method


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->