#சென்னை || அந்த காரில் ஒரு வாலிபர், இரண்டு பெண்களும் போதை மயக்கத்தில் இருந்தனர்., அடுத்தடுத்து அதிர்ச்சி சம்பவங்கள்.! - Seithipunal
Seithipunal


வடசென்னையில் கடந்த இரண்டு வாரத்தில் 10 பேருக்கு மேல் போதை மாத்திரை விவகாரத்தில் கைது செய்யப்பட்டு, 5000 -க்கும் அதிகமான போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

வண்ணாரப்பேட்டையில் இன்ஸ்பெக்டர் பிரான்வின்டேனி மற்றும் போலீசார்கள் வாகன பரிசோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியில் வந்த கார் ஒன்றை நிறுத்தினர்.

அந்த காரில் வாலிபர் ஒருவரும் இரண்டு பெண்களும் போதை மயக்கத்தில் இருந்தனர். மேலும் மெத்தம்பெட்டமின் எனும் போதை மாத்திரைகள் மற்றும் எல்.எஸ்.டி போதை ஸ்டாம்புகள் இருந்தன.

காவல்துறையினர் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில் அந்த வாலிபர் அண்ணா நகரைச் சேர்ந்த பாலசுப்பிரமணி என்றும், அந்த இளம் பெண்கள் தென்காசி மற்றும் சென்னையை சேர்ந்தவர்கள் என்றும் தெரிய வந்தது.

பாலசுப்பிரமணி அந்த இளம் பெண்களை போதை மாத்திரைக்கு அடிமையாக்கி சீரழித்து விட்டு விபசாரத்தில் தள்ளியதும் தெரியவந்துள்ளது.

மேலும் அவர்கள் தண்டையார்பேட்டை மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். இவர்களிடம் இன்ஸ்பெக்டர் பிரியதர்ஷினி விசாரணை நடத்தியபோது பல்வேறு அதிர்ச்சி தகவல் தெரிய வந்தது.

விசாரணையில், பாலசுப்பிரமணியன் இளம்பெண்களை போதை மாத்திரைக்கு அடிமையாக்கி பின்னர், அவர்களை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு விபசாரத்தில் தள்ளி இருப்பது தெரியவந்துள்ளது.

காவல்துறையினர் பாலசுப்ரமணியன் மீது வழக்கு பதிவு செய்து  கைது செய்தனர். மேலும், அது இளம் பெண்களை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

சென்னையில் பாலசுப்பிரமணியனுக்கு போதை மாத்திரைகள் விற்கும் பல கும்பலுடன் தொடர்பு இருப்பது தெரியவந்து, அவர்களையும் கைது செய்வதற்கு விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

இது மட்டுமின்றி பாலசுப்பிரமணியம் ஏராளமான இளம்பெண்களை சீரழித்துள்ளார். அவர்களைப் பற்றியும் காவல்துறையினர் ரகசிய விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chennai police arrest 10 members for smuggling


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->